டெல்லி : ரஷ்யா – உக்ரைன் போருக்கு நடுவே இந்தியாவின் அகிம்சை பாதையில் பிரதமர் மோடி மேற்கொள்ளும் ராஜதந்திர செயல்பாடுகள், உலகரங்கில் இந்தியாயவை முன்னிலைப்படுத்துகிறது. ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கி தற்போது வரையில் பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு உலக நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாகவும், சில நாடுகள் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இதில் இந்தியாவின் நிலைப்பாடு என்பது இரு நாட்டுக்கும் ஆதரவு என்ற சமநிலையில் உள்ளது. […]
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்பில் பிரதமர் மோடி பேசுகையில், பயங்கரவாதத்தின் வேதனை என்பதை என்னால் உணர முடிகிறது என கூறினார். பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்ற பிரதமர் மோடியை ரஷ்ய துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் வரவேற்றார். அடுத்து நேற்று இரவு ரஷ்ய அதிபர் புதின் உடனான சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது சில முக்கிய விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, ரஷ்ய ராணுவத்தில் […]
உக்ரைன்: பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். கடந்த 2022, பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதலை அவ்வபோது நிகழ்த்தி வருகிறது. நேற்று கூட, உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை உட்பட முக்கிய 5 நகரங்களில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். 170க்கும் அதிகமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கீவ் நகரில் உள்ள […]
மாஸ்கோ: ரஷ்ய பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று ரஷ்யா வாழ் இந்தியர்கள் மத்தியில் தலைநகர் மாஸ்கோவில் உரையாற்றி வருகிறார். இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி நேற்று தலைநகர் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினுடன் சந்திப்பை நிகழ்த்தினார். அப்போது இந்தியா – ரஷ்யா நாடுகளுக்கு இடையான பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். அதனை தொடர்ந்து இன்று மாஸ்கோவில் வாழும் ரஷ்யா வாழ் இந்தியர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டு பிரதமர் மோடி […]
மாஸ்கோ: ரஷ்ய ராணுவத்தில் சிக்கிய இந்தியர்களை விடுதலை செய்ய வேண்டும் என ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு சென்றுள்ளார். நேற்றும் இன்றும் ரஷ்யாவில் நடைபெறும் நிகழ்வுகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வருகிறார். நேற்று ரஷ்யா சென்ற பிரதமர் மோடியை ரஷ்ய துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் வரவேற்றார். மாஸ்கோவில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று […]
ரஷ்யா : 2 நாள் பயணமாக ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் மேற் கொண்டுள்ளார் பிரதமர் மோடி. அங்கு ரஷ்யா அதிபர் புதினின் வரவேற்புக்கு பதிலளித்து பேசி இருக்கிறார். ரஷ்ய அதிபரான விளாடிமிர் புதினின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று ரஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோ புறப்பட்டு சென்றார். அங்கு விமான நிலையம் சென்றடைந்த மோடியை, ரஷ்யா நாட்டின் மூத்த துணைப் பிரதமரான டெனிஸ் மான்டுரோவ் வரவேற்றார். […]
டெல்லி: 3 நாள் பயணமாக ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று பிற்பகல் ரஷ்யா சென்றடைய உள்ளார். பிரதமர் மோடி இன்று (ஜூலை 8) முதல் 3 நாட்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு செல்ல உள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பின் பெயரில் ரஷ்யா செல்லும் பிரதமர் மோடி அங்கு இந்தியா – ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது […]
டெல்லி: பிரதமர் மோடி வரும் ஜூலை 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையில் ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு செல்ல உள்ளர். பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது வழக்கம். கடந்த 10 ஆண்டுகால ஆட்சி காலத்தில் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு பன்னாட்டு நட்புறவை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி. அதே போல, தற்போது 3வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி தற்போதுள்ள அரசின் […]
ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக அரசியல் ரீதியில் செயல்பட்டு வந்தவரும், எதிர்கட்சி தலைவராகவும் செயல்பட்டு வந்த அலெக்ஸி நவல்னி கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார் என சனிக்கிழமை அன்று ரஷ்ய சிறைத்துறை அதிகாரிகள் அறிவித்தனர். அலெக்ஸி நவல்னி தீவிரவாத செயல்பாடுகளில் ஈடுப்பட்டதாக கூறி அவர்மீது குற்றம் சாட்டப்பட்டு கடும் குளிர் நிறைந்த ஆர்டிக் பகுதி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் சிறையில் இருந்த நவல்னியின் திடீர் மரணம் ரஷ்யா மட்டுமின்றி உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. […]
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அரசியல் ரீதியாக கடுமையாக எதிர்த்தவரும், எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டவருமான அலெக்ஸி நவல்னி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆர்டிக் சிறையில் உயிரிழந்தார். இவரது மரணத்தில் பல்வேறு சந்தேகம் இருப்பதாக கூறி நவல்னி ஆதரவாளர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அலெக்ஸி நவல்னி மீது தீவிரவாத குற்றசாட்டுகளை முன்வைத்து அவரை கடந்த 2020ஆம் ஆண்டு ரஷ்ய அரசு கைது செய்து அவருக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இருந்தது. இந்த தண்டனை பெற்று வந்த […]
புற்றுநோய்க்கு எதிராக சிகிச்சை பெறும் விளாடிமிர் புதினின் உடல்நலம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. விளாடிமிர் புதினின் உடல்நலம் மீது, எப்போதும் உலகம் முழுவதும் ஆர்வமாக உள்ளது, உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா இந்த வருடம் பிப்ரவரி மாதம் போர் ஆரம்பித்து, உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து அவரது உடல்நலம் குறித்து உலகம் கூடுதல் கவனம் செலுத்திவருகிறது. புற்றுநோய்க்கு எதிராக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், மேற்கத்திய சிகிச்சை பெற்று வருவதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்ய வரலாற்றாசிரியரும் […]
விலை வரம்பை ஆதரிக்கும் நாடுகளுக்கு எண்ணெய் விநியோகத்தை தடை செய்யப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யா அதிபர் புதின், பிப்ரவரி 1, 2023 முதல் ஜூலை 1, 2023 வரையிலான விலை வரம்பை நிர்ணயம் செய்வதில், பங்கேற்கும் நாடுகளுக்கு எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்களை வழங்குவதை தடை செய்யும் ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். இதில் ஜி-7 நாடுகளான அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள், இந்த மாதம் ரஷ்யாவின் […]
உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யாவிற்கு பித்து பிடிக்கவில்லை என்று புதின் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஷ்யாவில் நடந்த தாக்குதலுக்கு, உக்ரைன் மற்றும் அமெரிக்கா உதவியுடன் நடந்திருக்கலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அதற்கு பதிலளித்து பேசியுள்ளார். உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா, முதலில் அணு ஆயுதங்களை பயன்படுத்தாது, ரஷ்யாவிற்கு இன்னும் அந்த அளவுக்கு பித்து பிடிக்கவில்லை. அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் உள்ள ஆபத்து பெரிதாக […]
ரஷ்ய அதிபர் புதின், மோடி தலைமையிலான இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையைப் புகழ்ந்து பேசியுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ரஷ்யாவின் வால்டை விவாத கிளப்பில் நடைபெற்ற கூட்டத்தில் மோடியின் இந்திய வெளியுறவுக்கொள்கையைப் பற்றி புகழ்ந்து தள்ளியுள்ளார். மோடியின் தலைமையில் இந்தியா, பொருளாதாரத்தில் சிறந்த நிலையை அடைந்துள்ளது. மேலும் புதின் கூறியதாவது, மோடி தன்னை நாட்டுப்பற்றாளர் என்று கூறிக்கொள்ளும் வகையில் அவர், இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறார். மோடியின், “மேக் இன் இந்தியா” திட்டத்தின் மூலம் […]