கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 12,636 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். இன்று, தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும், கன்னியாகுமரி தொகுதி மக்களவை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று வருகிறது. இதில், கன்னியாகுமரி தொகுதியில் மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜய் வசந்த் 46,886 வாக்குகளும், பொன் ராதாகிருஷ்ணன் 34,250 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால், காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 12,636 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.எனவே வருகின்ற ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் […]
ரஜினி ஆரம்பிக்கும் கட்சிக்கு இப்போது நேரம் சரி இல்லை என்று மறைந்த கன்னியாகுமரி எம்.பி.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் பேட்டியளித்துள்ளார். தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு காலியாக இருக்கும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட விரும்பி காங்கிரஸ் மேலிடத்துக்கு விஜய் வசந்த் விருப்பம் தெரிவித்தார். ஆனால், மேலிடம் இதுவரை எந்த சிக்னலும் கொடுக்கவில்லை. இதனால், தனது தந்தையின் பாணியிலேயே தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அரசியல் செய்து வருகிறார். இந்நிலையில், ரஜினி, கமல் வரும்போது அவர்களை […]