மோசடி வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தும் பட்சத்தில், அவர் அடைக்கப்பட உள்ள சிறையின் வீடியோ இங்கிலாந்து நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. வங்கி கடன் மோசடி வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான விஜய் மல்லையா மீதான வழக்கில், அவரை லண்டனிலிருந்து நாடுகடத்தும் பட்சத்தில் மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்படுவார் என வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் சிபிஐ தகவல் தெரிவித்தது இருந்தது. இந்நிலையில் சிறை பாதுகாப்பு குறித்து வீடியோவை தாக்கல் செய்ய கடந்த மாதம் 31ம் […]