கேப்டன் விஜயகாந்த் அவர்கள் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நாடு முழுவதும் இன்று பொங்கல் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்கள் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், மக்கள் மனதில் இன்பம் பொங்கிட, விவசாயிகள் வாழ்வில் துயர் நீங்கிட, உலகெங்கும் வாழ்கின்ற தமிழக மக்கள் […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது ஆனால் காவல்துறை சோதனையில் இது புரளி என தெரிய வந்திருக்கிறது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டி உள்ளார். இதைத்தொடர்ந்து விஜயகாந்த் வீட்டிற்கு காவல்துறை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் நேரடியாக சென்று சோதனை நடத்தினர். சோதனையில் எந்த பொருளும் சிக்கவில்லை. இதனால், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இந்த வெடிகுண்டு மிரட்டல் […]
காலதாமதம் செய்யாமல் விரைந்து தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், செய்யூர் சட்டமன்ற தொகுதி பூத் முகவர்கள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக கட்சி ஆரம்பித்து 16 வருடம் ஆகியுள்ளது. கூட்டணி எனக்கு எப்போதுமே பிடிக்காது. தமிழில் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு என்று கேப்டன் கூறியுள்ளார். ஆனால், எனக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை கூட்டணி […]
கடந்த மாத இறுதியில், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனையை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேற்கொண்டார். அப்போது கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து, சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர், தேமுதிக பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்திற்கும் கொரோனா உறுதியானது. பிறகு விஜயகாந்தும், பிரேமலதா விஜயகாந்த் இருவரும் மூன்று நாள்களுக்கு முன் டிஜ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், விஜயகாந்த் இரண்டம் கட்ட பரிசோதனைக்காக, கடந்த 6 ஆம் தேதி […]
தமிழக்தில் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பல அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். இந்நிலையில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்திற்கு அறிகுறியின்றி கொரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நாராயணனுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் 16 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி தேமுதிக கொடியேற்றினார். தேமுதிகவின் 16-வது ஆண்டு துவக்க விழா இன்று கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், தலைவர் விஜயகாந்த் கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் 16-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி தேமுதிக கொடியேற்றியுள்ளார். இதனிடையே, தேமுதிக தலைவர் விஜயகாந்த், இந்த ஆண்டு தேமுதிக 16-ஆம் ஆண்டு துவக்க விழா மக்களுக்கு பயன்படும் வகையில் கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். மேலும் 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் […]
மித்ரன் என்ற படத்தில் கமிட்டாகியுள்ளார்.இவர்கள் இருவருமே உடல் பருமனுடன் குண்டாக ஒரு சமயத்தில் இருந்தவர்கள் தற்போது சுமார் 30 கிலோ வரை எடையை குறைத்துள்ளனர். தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸில் நூற்றுக்கணக்கான படங்களை தனது கர்வமான நடிப்பாலும், பேச்சாலும் கொடுத்தவர் தமிழ் சினிமாவின் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த். இவரது படங்களில் நல்ல கருத்துக்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும். அதனையடுத்து படங்களிலிருந்து விலகி அரசியலில் களமிறங்கினார். சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் அரசியல் கட்சியிலிருந்து விலகியிருந்த இவர் சிலமாதங்களுக்கு […]
மூன்று லட்சம் புகைப்படக் கலைஞர்களுக்கு உதவி தொகை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கேப்டன் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு 3 கட்டமாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இந்த ஊரடங்கால் அனைத்து தரப்பு மக்களும், தொழில்களும் பாதிக்கப்பட்டிருந்தாலும், தமிழக அரசு நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கியது, ஆனால் […]
அந்தமானில் சிக்கித்தவிக்கும் 300க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தேமுதிக சார்பில் செய்து தரப்பட்டுள்ளதாக விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட 8க்கும் அதிகமான மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் அந்தமானில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் தமிழக மீனவர்கள் நாடு […]
கடந்த 2012-ம் ஆண்டு தஞ்சாவூரில் தேமுதிக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தஞ்சாவூர் மாவட்டம் முதன்மை அமர்வு நிதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் விஜயகாந்த் நேரில் ஆஜராவதிலிருந்து உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளதாக, அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி […]
கடந்த வருடம் தமிழக இளைஞர்கள் பெரும் போராட்டம் நடத்தி நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மீட்டேடுத்தனர். இதற்க்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்தனர். அப்போது இளைய தளபதி விஜய் தனது ஆதரவை தெரிவித்ததுடன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அடுத்தவாரம் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்து வெளிவரவிருக்கும் படம் மதுரவீரன். இப்படம் ஜல்லிகட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் பேசிய வீடியோவும் இடம்பெற்றுள்ளது. இது தளபதி ரசிகர்களை […]
தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த 2013ஆம் ஆண்டு ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பத்திரிக்கையாளர் ஒருவரை தாக்கியதாக கூறி அவர் மீது வழக்குபதிவு செய்யபட்டது. இந்த வழக்கில் விஜயகாந்த் அவர்களுக்கு ஆலந்தூர் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிரப்பித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து விஜயகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை சற்றுமுன் விசாரித்த நீதிபதி அவருக்கு பிறப்பித்திருந்த பிடிவாரன்ட் உத்தரவை ரத்து செய்து உத்தரவிடபட்டுள்ளது.