கேப்டன் என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்த் ஆரம்ப காலத்தில் ஆக்சன் படங்கள் பெரிய அளவில் விமர்சனங்களை பெற்று சூப்பர் ஹிட் ஆகி கொண்டு இருந்தது. 1980-90 கால கட்டத்தில் ரஜினி, கமல்ஹாசனுக்கு இணையான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருந்தவரும் இவர் தான். ஆனால், இப்பொழுது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த சில வருடங்களாகவே வெளியுலகிற்கு வராமல் வீட்டிலேயே மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் உடல்நலம் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டி […]
சென்னையில் தேங்கிய மழைநீரை துரித நடவடிக்கை எடுத்து அகற்றிய முதல்வர், தமிழ்நாடு அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு. இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், எதிர்கட்சிகள் சுட்டிக்காட்டியதற்கு இணங்க, சென்னையில் தேங்கிய மழை நீரை துரித நடவடிக்கை மேற்கொண்டு, ராட்சத இயந்திரங்கள் கொண்டு மழைநீரை அகற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். வட கிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் கடந்த […]
தேமுதிக தொடங்கி 17 ஆண்டுகள் நிறைவடைந்து 18-ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கும் நிலையில், தொடர்களுக்கு கேப்டன் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்ததில், பல்வேறு சவால்களை தாண்டி நல்ல நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்ட கட்சி நமது தேசிய முற்போக்கு திராவிட கழகம். நமது கட்சி தொடங்கி 17 ஆண்டுகள் முடிவடைந்து (14.09.2022) அன்று 18 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தேமுதிக தொடர்ந்து மக்களுக்காக மக்கள் பணி ஆற்றி தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது. […]
கடும் பொருளாதார நெருக்கடியால், மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் இலங்கையில் ஏற்பட்ட வன்முறையில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 231 பேர் காயமடைந்துள்ள நிலையில், 5 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும்,நேற்று நடந்த வன்முறையில் 30க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.இந்த சூழலில்,நேற்று இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார்.இதனைத் தொடர்ந்து, இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், நாடாளுமன்றத்தை உடனடியாக […]
மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தமிழக முதல்வர் ஆய்வு செய்தால் மட்டும் போதாது,மழை நீரை அகற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், மழை நீரில் பயிர்களை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கும் தமிழக அரசு உரிய இழப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,இது தொடர்பாக தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை […]
தேமுதிக தலைவர் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் முழு உடல்நலன் பெற்று தனது அரசியல் பணிகளை மேற்கொள்ள விழைகிறேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விஜயகாந்த் பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்வதில்லை, தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கூட மக்களிடம் வாக்கு சேகரிக்கும் போது, கைகளை மட்டுமே அசைத்து வாக்கு சேகரித்தார். இதற்கிடையில், இன்று அதிகாலை 3 மணியளவில், விஜயகாந்திற்கு […]
தேமுதிக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம நேர்காணல் மார்ச் 6 முதல் 8 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் மார்ச் 5-ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு அளித்தவர்களிடம் கீழ்க்கண்ட தேதிகளில் […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ,234 சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது தேமுதிக. இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. அண்மையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், தேமுதிகவின் நிறுவனத் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் தலைமையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும் […]
தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில், கொரோனா முன்களப்பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.மேலும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா ,துணை செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டன. தீர்மானங்கள் விவரம் : மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் […]
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.இதனிடையே தேமுதிக கடந்த மக்களவை தேர்தலில் இருந்து அதிமுக கூட்டணியில் இருந்து வருகிறது. ஆனால் வருகின்ற சட்டசபைத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்ற […]
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ,திமுக சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை இந்த வருடமே வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 50 % இட ஒதுக்கீடு அல்லது 27% இட ஒதுக்கீடு என எதையும் […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், அண்மையில் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார். நேற்று இரவு அவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரின் உடல்நலம் தொடர்பாக, மியாட் மருத்துவமனையின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சீரான திட்டமிடப்பட்ட தொடர் சிகிச்சைக்காக […]
உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவரைதொடர்ந்து அவரின் மனைவியும், பிரேமலதா விஜயகாந்திற்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்ட்டதை அடுத்து அவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருவரும் கடந்த 2 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்கள். இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்பொழுது உடல்நலக்குறைவு […]
விஜயகாந்த் உடல்நலன் குறித்து தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ட்வீட் செய்துள்ளார். தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இருப்பதால் தற்போது சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆறு மாதத்திற்கு ஒரு முறை விஜயகாந்திற்கு வழக்கமாக மருத்துவ பரிசோதனை செய்வதற்கு மருத்துவமனை சென்றபோது லேசான கொரோனா அறிகுறி இருந்தது. ஆனால் அதை, உடனடியாக அதை சரிசெய்யப்பட்டு, தற்போது பூர்ண குணமுடன் உள்ளார் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில், […]
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு தெரிவித்தது தொடர்பாக தமிழக அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். வேதாந்த நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆலையை திறக்க அனுமதியில்லை என்றும் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.எனவே இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர். துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கருத்து […]
மக்களால் பாராட்டக் கூடிய ,வரவேற்கக்கூடிய திட்டங்கள் தான் வெற்றிபெறும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார். வேதாந்த நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆலையை திறக்க அனுமதியில்லை என்றும் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.எனவே இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் தனது […]
அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவது தமிழருக்கு பெருமை என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வாழ்த்துக்கள். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ட்ரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். அதேநேரத்தில் துணை அதிபருக்கான தேர்வும் நடைபெறவுள்ளது. இதனால், துணை அதிபர் பதவிக்கு தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் போட்டியிட உள்ளார். […]
விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த எரித்துக் கொல்லப்பட்ட ஜெயஸ்ரீயை குடும்பத்தினருக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அவர்கள் 1 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். விழுப்புரம் அருகே சிறுமதுரை என்ற ஊரில் ஜெயபால் என்பவரின் மகள் ஜெயஸ்ரீயை அதிமுகவின் கலியபெருமாள் மற்றும் முருகன் ஆகியோர் தீவைத்து கொளுத்தினர்.பலத்த காயங்களுடன் ஜெயஸ்ரீ முண்டியப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அதிமுக நிர்வாகிகள் கலியபெருமாள் மற்றும் […]
“கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க கல்லூரி மற்றும் தலைமை அலுவலகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது.எனவே இதற்காக சிகிச்சை அளிக்க பல தரப்பினரும் சொந்தமான ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றை கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,தேமுதிக தலைமை அலுவலகம் மற்றும் ஆண்டாள் அழகர் கல்லூரியை […]
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ், தற்பொழுது இந்தியாவிலும் மிக வேகமாக பரவியுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முழுவீச்சில் எடுத்துவருகிறது. பிரதமர் மோடியின் சுயஊடரங்கு உத்தரவை மக்கள் பின்பற்றி வருகின்றனர். இதனால் முக்கியமான சாலைகள் மற்றும் இடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றது. மேலும், சில திருமண நிகழ்ச்சி உறவினர்கள் இல்லாமலும் நடந்து உள்ளது. சில திருமணங்கள், தள்ளியும் போகியுள்ளது. இந்நிலையில், இன்று சைதாப்பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெறவிருந்த தேமுதிக நிர்வாகியின் திருமணம், தேமுதிக […]