மாநகராட்சி பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு காலங்களில் குறைந்தது 6 மாத சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தல். தமிழக அரசு அனைத்து மாநகராட்சிகளிலும் பணிபுரியும் தற்காலிக மற்றும் தினக்கூலி பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ நகராட்சி நிர்வாகத்துறை பிறப்பித்துள்ள அரசாணை எண் 152-ஐ ரத்து செய்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி பெண் […]
தமிழகம் முழுவதும் இயக்கப்படும் காலாவதியான அரசு பேருந்துகளை மாற்ற வேண்டும் என விஜயகாந்த் வேண்டுகோள். தமிழகம் முழுவதும் இயக்கப்படும் காலாவதியான அரசு பேருந்துகளை மாற்றி, மக்கள் பாதுகாப்பாக பயணிக்க புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என கேப்டன் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்தில் இருக்கை கழன்றதால் அதில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் பேருந்தில் இருந்து வெளியே விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை […]
ஏழை, எளிய மக்களுக்காக சேவைபுரியும் போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,’தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்படுகிறது. அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு போடப்பட வேண்டிய 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை கரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாமதமாகின. இதற்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தங்களும் […]