உலக புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழாவுக்கு அடுத்தபடியாக, தசரா திருவிழா கொண்டாப்படும் ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம். இங்கு அருள்பாலிக்கும் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குலசை நோக்கி படையெடுத்து வருவர். லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நாளை குலசை முத்தாரம்மன் கோயில் கடற்கரையில் சூரசம்கார நிகழ்வு நடைபெறும். திருச்செந்தூரில் இருந்து 15 கிமீ தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 65 கிமீ தொலைவிலும் அமைந்துள்ள ஊர் குலசேகரன்பட்டினம். பொதுவாக […]