மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் கொரோனா குறைந்து வந்த போதிலும் அலட்சியம் காட்ட வேண்டாம். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டுமென அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தினார். தீபாவளியை தொடர்ந்து கார்த்திகை, கிறிஸ்துமஸ், நியூ இயர் மற்றும் பொங்கல் போன்ற பண்டிகைகள் தொடர்ந்து வருவதால் இந்த நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் முககவசம் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றுதல் ஆகியவற்றை இன்னும் இரண்டு மாதத்தில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.சீனா மட்டும் அல்லாமல் உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி வருகிறது.இதனால் உலகின் பிற நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்தில் இதுவரை […]
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 2 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 2 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரில் 10% பேருக்கு டெங்கு அறிகுறி உள்ளது. தற்போது பெய்யத் […]
காய்ச்சலால் தமிழகத்தில் ஒரு உயிரிழப்பு கூட நிகழக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான மருந்து வசதிகள் தமிழகம் முழுவதும் தயார் நிலையில் உள்ளது . காய்ச்சலால் தமிழகத்தில் ஒரு உயிரிழப்பு கூட நிகழக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது .காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று […]
நீட் தேர்வில் ஆள்மாறாட்ட முறைகேடுகளை தடுக்க நீட் தேர்வை நடத்தும் மத்திய அரசின் தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் எழுத உள்ளோம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் காய்ச்சல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் உள்ளன.நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. நீட் தேர்வில் ஆள்மாறாட்ட முறைகேடுகளை தடுக்க நீட் தேர்வை நடத்தும் மத்திய அரசின் தேசிய தேர்வு முகமைக்கு […]
தமிழகத்தில் குழந்தை மற்றும் தாய்மார்களின் இறப்பு சதவீதம் குறைந்துள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், தமிழக அரசு எடுத்த சீரிய முயற்சியால் குழந்தை மற்றும் தாய்மார்களின் இறப்பு சதவீதம் குறைந்துள்ளது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக சிறந்த மாநிலத்துக்கான விருதை தமிழகம் பெற்றுள்ளது. தமிழகத்தில் இதுவரை டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்களால் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை .இந்த ஆண்டு டெங்கு […]
கடந்த பிப்ரவரி 11ம் தேதி நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கொம்பன் காளை பங்கேற்று இறந்துவிட்டது. அக்காளை வாடிவாசல் அருகே இருந்த தென்னைமர கட்டையில் மோதி சுருண்டு விழுந்து இறந்தது. தலையில் கட்டை இடித்ததால் தான் இறந்ததாக கால்நடை டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், கொம்பன் மர்மமாக இறந்ததில் எழுந்த சந்தேகத்தின் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று புளூகிராசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சரின் கொம்பன் காளை எப்படி இறந்தது என சோதனையிட […]