சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பின் கடந்த 27-ம் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அதற்கு முன்னதாகவே ஜனவரி 20-ஆம் தேதி பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால், சசிகலா 11 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில், குமரி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். […]