உத்தரபிரதேச அரசின் வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் விஜய் காஷ்யப் கொரோனாவால் செவ்வாய்க்கிழமை காலமானார். முசாபர்நகரின் சரதவல் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ விஜய் காஷ்யப் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் செவ்வாய்க்கிழமை காலமானார்.அவருக்கு வயது 52. உத்தரபிரதேசத்தில் கொரோனாவிற்கு உயிரை இழந்த ஐந்தாவது பாஜக எம்.எல்.ஏ.விஜய் காஷ்யப். பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்: விஜய் காஷ்யப்பின் மரணம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் […]