சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த பிறகும் விக்னேஷுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் வரவில்லை என உறவினர்கள் குற்றம் சாடி போராட்டம் நடத்தி வருகிறார்கள். பெரும்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் எனும் இளைஞர் தீராத வயிற்று வழியால் அவதிப்பட்ட நிலையில் கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த அவசர சிகிச்சை பிரிவு […]