சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணிக்கு மாநில இளைஞர் அணி துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் கிருஷ்ணகிரியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் வீரப்பனின் மகள் வித்யா ராணி பாஜகவில் இணைந்தார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச் செயலாளர் முரளிதர் ராவ், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். இந்நிலையில், மாநில இளைஞர் அணி துணைத் தலைவராக வீரப்பனின் மகள் வித்யா ராணி நியமனம் செய்யப்பட்டார்.