சென்னை : தரமான படைப்புகளை எப்போது ஏமாற்றம் அளிக்காமல் மக்களுக்கு கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இதுவரை இவர் இயக்கிய அனைத்து படங்களுமே வெற்றிபெற்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பட்டியலில் இருந்து வருகிறது. அந்த பட்டியலில் கடைசியாக விடுதலை முதல் பாகம் இணைந்தது. தமிழ்நாட்டில் 1980களில் நடந்த உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி இருந்தார். முதல் பாகம் முடிவடையும் போது படத்திற்கான இரண்டாவது பாகமும் உருவாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. […]