மக்களவை தேர்தல் : தமிழக மக்களவை தொகுதியான சிதம்பரத்தில் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினரான தொல்.திருமாவளவன் அவர்கள் 48,962 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து அதிமுக சார்பாக போட்டியிட்ட எம்.சந்திரஹாசன் 38,076 வாக்குகள் பெற்று -10,886 வாக்குகள் பின்னடைவில் உள்ளார். மேலும், இவர்களை தொடர்ந்து 3-வதாக 15,582 வாக்குகள் பெற்று -33,380 வாக்குகள் பெற்று பாஜக சார்பாக போட்டியிட்ட கார்த்தியாயினி பின்னடைவில் இருந்து வருகிறார். விடுதலை சிறுத்தை கட்சியின் மற்றொரு தொகுதியான விழுப்புரத்தில் ரவிக்குமார் […]
2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்றும் கூட்டணி குறித்து தீர்மானிக்கும் அதிகாரத்தை அக்கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு வழங்கியும் தீர்மனம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த […]
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளது. இதில், பாஜக பிரமுகரும், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான நடிகை குஷ்புவும் களமிறங்கினார். ஆனால் தாம் பேசியதில் தவறில்லை என மன்சூர் அலி கான் முதலில் விளக்கம் தந்திருந்தார். இருப்பினும், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை குஷ்பூ கோரிக்கை விடுத்திருந்தார். இது […]
நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் திமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து. தருமபுரி அருகே நடைபெற்ற நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர் சந்திப்பின் போது நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் திமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி […]
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அவதூறுகளை பரப்பி வருகின்றனர் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் குற்றச்சாட்டு. வன்முறையை தூண்டும் வகையில் வதந்தி பரப்புவோர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். வதந்தி பரப்ப சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அவதூறுகளை பரப்பி வருகின்றனர் எனவும் கூறியுள்ளார். மேலும், சமூகப் […]
விசிக கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனு தந்தவர்களிடம் நாளை நேர்காணல் நடைபெறவுள்ளது. சட்டமன்ற தேர்தலில் விசிக கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனு தந்தவர்களிடம் நாளை நேர்காணல் நடைபெறவுள்ளது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி எந்தந்த தொகுதியில் போட்டியிடவுள்ளது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவுள்ளது. நாளை மறுநாள் முதல் வேட்புமனு தாக்கல் நடைபெறவுள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் 1வது வார்டில் செல்வி செங்குங்குட்டுவன் வெற்றிபெற்றார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தம்பி மனைவி ஆவார். தமிழகத்தில் நடைபெற்ற ஊராக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தற்போது வேகமாக எண்ணப்பட்டு வருகின்றன. அதன் முடிவுகள் தற்போது வேகவேகமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் 1 வது வார்டில் திமுகவை சேர்ந்த சோபனா ராஜி வெற்றிபெற்றுள்ளார். ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சியில் 1வது வார்டில் அதிமுகவை சேர்ந்த சாந்தி […]
இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள தேசத் துரோக வழக்கை ரத்து செய்ய வேண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார்கள்.அந்த கடிதத்தில் சிறுபான்மையினர்,தலித்துகள்,இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்கள்.ஆனால் இவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.வழக்கறிஞர் சுதிர் குமார் அளித்த புகாரின் பேரில் பீகார் காவல்த்துறையினர் இந்த […]