ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா வைரஸ் காரணமாக மாநிலத்தின் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தும் என்ற எதிர்பார்ப்பில் இந்த நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான பரிசோதனையை அதிகரிக்கபடும் என்று அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். ஆஸ்திரேலியாவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான விக்டோரியாவில் தினசரி கொரோனா வைரஸ் தொற்றுகள் இன்று ஒன்பது பேராக குறைந்துவிட்டது. இதற்கு முந்தைய நாட்களில் இது 12 ஆக இருந்தது. அதே நேரத்தில் உயிரிழப்புகள் ஏதும் கிடையாது.