சட்டப்பேரவை விதியின் கீழ் எதிர்க்கட்சி தலைவர் பதவி மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட பதவியாகும் என சபாநாயகர் விளக்கம். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பேரவையில் இருந்து வெளியேற சபாநாயகர் உத்தரவிட்டார். இதன்பின், எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக பேசிய சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு அங்கீகாரம் இல்லை. சட்டப்பேரவை விதியின் கீழ் எதிர்க்கட்சி தலைவர் பதவி மட்டுமே […]
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பிரதமர் மோடி தனது வாக்கினை பதிவு செய்தார். குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு டெல்லி, நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தனது வாக்கை பிரதமர் மோடி பதிவு செய்தார். பிரதமரை தொடர்ந்து மத்திய அமைச்சர் […]