உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார். இன்றும், நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். இந்த மாநாட்டுக்கு மொத்தம் 49 பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இதில் பெரும்பாலான அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, […]