பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த ஜெகநாதன் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் சார்பில் காவல்துறையில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில்” போலி ஆவணங்கள் தயாரித்து துணைவேந்தர் ஜெகநாதன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து ‘பூட்டா்’ அறக்கட்டளை என்ற பெயரில் கல்வி நிறுவனத்தை தொடங்கி உள்ளனர் என தெரிவித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கருப்பூர் காவல்துறை கடந்த டிசம்பர் மாதம் 26-ம் தேதி […]
தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். துணை வேந்தர் நியமனம் தொடர்பான முடிவுகளையும் ஆளுநர் தான் தேர்வு செய்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் (கோவை), கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் பணிகள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சான்றிதழ்.. முதலமைச்சர் அறிவிப்பு பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்க வழக்கமாக, ஆளுநர் தரப்பில் இருந்து ஒரு நபரும், மாநில அரசு […]
பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் காணொலி வாயிலாக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, துணைவேந்தர்களுடன் காணொலி வாயிலாக தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி, ஆராய்ச்சி& மேம்பாடு, கற்றல் அடைவு திறன் மேம்பாடு, உலகளாவிய தரவரிசை பட்டியலில் இடம்பிடித்தல், தேசிய கல்வி கொள்கை அமலாக்கம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
சென்னை:தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தேடல் குழு அறிவித்துள்ளது. தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தேடல் குழு அறிவிப்பு விடுத்துள்ளது. அதன்படி,தகுதியானவர்கள் http://tnjjmfau.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தேடல் குழு தெரிவித்துள்ளது. தமிழக இசை மற்றும் நுண்கலைகளை வளர்ப்பதற்காக 2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சென்னையில் நிறுவிய தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகம் […]
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய தேடல் குழுவை அமைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய தேடல் குழுவை அமைத்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்திய வானிலை மைய முன்னாள் இயக்குனர் லட்சுமண் சிங் தலைமையில் குழு அமைத்து தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் என்ற புகாரை முழுமையான தகவல்கள் கிடைத்ததும் ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் என புகார் உள்ளது . முழுமையான தகவல்கள் கிடைத்ததும் ஆளுநர் நடவடிக்கை எடுப்பார். ஓபிஎஸ் – தினகரன் விவகாரமானது இது அவர்களுக்குள் நடக்கும் பங்காளி சண்டை ஆகும்.அதேபோல் ஐயப்பனின் மகிமையை அறிந்த இளம்பெண்கள், சபரிமலைக்கு செல்ல மாட்டார்கள் என்றும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள மாநில அரசின் சார்பாக பள்ளிக்கல்வி திட்டத்தில் புதிய பாடத்திட்டம் தயாரிக்க அரசாணை வெளியிடப்பட்டது. இந்த பணிக்காக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன் தலைமையில் நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது.மேலும் வருகிற கல்வி ஆண்டில் (2018-2019) 1, 6, 9 மற்றும் பிளஸ்-1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு, நிபுணர் குழுவினரால் தயாரிக்கப்பட்டது. புதிய பாடத்திட்டத்திற்கான சி.டி.யை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த மாதம் 21-ந்தேதி இதுகுறித்து அறிவிப்புகளை வெளியிட்டார். […]
ஆந்திர மாநிலத்தின் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு. ராமுலு என்பவரை தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தருக்கான தேடுதல் குழுவின் உறுப்பினராக நியமனம் செய்துள்ளார். முன்னாள் நீதிபதி ராமுலு அவர்கள் ஆந்திர பிரதேச உயர்நீதி மன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும் பின்னர் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். தமிழக ஆளுநரால் தேர்வு செய்யப்பட்ட அந்த தேர்வு குழுவில் பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர், முனைவர் ஊ.தங்கமுத்து, பல்கலைக்கழக பேரவை பிரதிநிதியாகவும், திரு.எஸ்.பி.இளங்கோவன், இ.ஆ.ப., […]