பயங்கரவாதம் என்ற வார்த்தையை நீக்காவிட்டால் சி.ஐ.ஏ.வுக்கு எதிராக உலக அளவில் போராட்டம் நடைபெறும் என்று வி.ஹெச்.பி தெரிவித்துள்ளது. விஎச்பி அமைப்பின் பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சிஐஏவின் குற்றச்சாட்டு பொய்யானது, ஆதாரமற்றது. ஒசாமா பின்லேடனை உருவாக்கியதே சிஐஏ தான். சிஐஏ வரைபடத்தில் காஷ்மீரின் குறிப்பிட்ட பகுதி இந்தியாவை சேராதது என குறிப்பிட்டுள்ளது. இது சிஐஏ.வின் இந்தியாவுக்கு எதிரான மனநிலையை காட்டுகிறது. விஎச்பி.யை மத தீவிரவாத அமைப்பு என கூறியதற்கு, சிஐஏ மன்னிப்பு கேட்க வேண்டும். […]