மனிதநேயத்தின் அடிப்படையில் கிடைத்துள்ள இந்த விடுதலையானது திமுக அரசுக்கு கிடைத்த இரண்டாவது வெற்றி. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்த நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிசந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்த நிலையில், நளினி உள்பட 6 பேர் விடுதலைக்கு தமிழக […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட எஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட எஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில், எஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்தது உச்சநீதிமன்றம். நளினி, ராமச்சந்திரன் மனுக்களை விசாரித்த பிஆர் காவாய் தலைமையிலான உச்சநீதிமன்றம் அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து, சிறப்பு […]
அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதுக்கு எதிரான வழக்கில் இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு. அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதை அகற்றக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்ததை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். கடந்த 11-ஆம் தேதி பொதுக்குழுவின் போது கட்சி அலுவலகத்தில் வன்முறை நடந்ததால் வருவாய் கோட்டாட்சியர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தார். இதனிடையே, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் […]
வரி விதிக்கும் மாநில அரசின் அதிகாரத்தை மீறி ஜிஎஸ்டி கவுன்சில் முடிவெடுக்க அதிகாரம் இல்லை என அமைச்சர் தகவல். ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியிருந்தது. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மற்றும் அறிவுரைகள்தான் வழங்க வேண்டுமே தவிர இதை கட்டாயம் செய்யுங்கள் என்று எந்தவொரு அரசுகளுக்கும் உத்தரவிடமுடியாது என்றும் ஜிஎஸ்டி தொடர்பான விவகாரத்தில் சட்டங்களை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு சட்டப்பிரிவு […]
தமிழ்நாட்டை உலுக்கிய பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என்று மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி நாமக்கல் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட நிலையில், மீட்கப்பட்டார். இந்த வழக்கில் யுவராஜ் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு, மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. கடந்த 2019 மே 5 முதல் […]
கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி நடந்த நடிகர் சங்க தேர்தல் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு. நடிகர் சங்க தேர்தல் செல்லும் என்றும் மறுதேர்தல் தேவையில்லை எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி நடந்த நடிகர் சங்க தேர்தல் செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாசர், விஷால், கார்த்தியின் மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் புஷ்பா சந்திரநாராயணா, முகமது ஷபீக் தீர்ப்பு […]
ஆர்.எஸ் பாரதி முன் ஜமீனுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குவதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய கோரி காவல்துறை தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. கடந்த 23 ஆம் தேதி நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் குமார் என்பவர் காவல் துறையினரிடம் […]
ஆர.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய கோரி காவல்துறை தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு. திமுக அமைப்பு செயலாளர் ஆர.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய கோரி காவல்துறை தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனிடையே கடந்த 23 ஆம் தேதி நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் குமார் என்பவர் […]
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக, சென்னை வளசரவாக்கத்தில் தங்கி இருந்த இலங்கையை சேர்ந்த அருண் செல்வராஜன் என்பவர் கடந்த 2013ம் ஆண்டு தேசிய புலனாய்வு சிறப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் வழக்கை விசாரித்த வந்த நீதிபதி செந்தூர்பாண்டி நேற்று தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அருண் செல்வராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் […]
நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு தனித்தனியே தூக்கு தண்டனை நிறைவேற்றக் கோரி திகார் சிறை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பளிப்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது டெல்லி நீதிமன்றம், நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை இரண்டாவது முறையாக ஒத்திவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு தனித்தனியே தூக்கு தண்டனை நிறைவேற்றக் கோரி திகார் சிறை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக […]
நிலம் கொண்டாடுவதில் பிரச்சினை : உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை உரிமை கொண்டாடுவதில் பிரச்சினை இருந்தது. அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு : நில பிரச்சினை காரணமாக ,2010-ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் அந்த நிலத்தை, ராம் லல்லா, நிர்மோஹி அஹாரா, சன்னி வக்பு வாரியம் ஆகிய மூன்று தரப்பினரும் சரி சமமாக பிரித்துக்கொள்ள தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு : இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. […]
மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி ராஜாராமுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் வாரிசு யார் என கருத்துக் கணிப்பில் வெளியிட்ட தினகரன் அலுவலகத்தின் மீது 2007 ஆம் ஆண்டு தாக்குதல் நடந்தது. அழகிரி ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் தினகரன் அலுவலகத்தில் பணிபுரிந்த முத்துராமலிங்கம், கோபிநாத்,வினோத் ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கு வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேர் மீது […]
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டதால் இவர்களை மத்திய கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டது. கட்டாய விடுப்பில் அனுப்பிய நடவடிக்கையை எதிர்த்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.கடந்த 6ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் இன்று வழங்க இருக்கின்றனர்.