கும்மிடிப்பூண்டி திமுக முன்னாள் எம்எல்ஏ கி.வேணு அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த இரங்கல் குறிப்பில், தமிழ்நாட்டின் வட எல்லையான திருவள்ளூர் மாவட்டத்தில் கழகத்தை கட்டிக் காத்த தீரர் அருமை சகோதரர் கும்மிடிப்பூண்டி வேணு மறைந்தார் என்ற செய்தி கேட்டு துடிதுடித்துப் போனேன். இவர் எத்தகைய இடவரினும் எதிர்த்து நிற்கும் அஞ்சாத நெஞ்சுக்கு சொந்தக்காரர். கும்மிடிப்பூண்டி என்றாலே வேணு தான் என்று சொல்லும் அளவுக்கு […]