தன்னை பற்றி அவதூறு பேசிய விவகாரத்தில், 24 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தொலைக்காட்சி, யூடியூப் சேனல்கள் மூலம் மன்னிப்பு வீடியோ வெளியிட வேண்டும் என அதிமுக முன்னாள் நிர்வாகி ராஜூவுக்கு நடிகை த்ரிஷா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சேலம் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, சமீபத்திய பேட்டி ஒன்றில் கடந்த 2017 ஆம் ஆண்டு கூவத்தூர் தனியார் விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்தபோது, நடிகைகள் அழைத்து வரப்பட்டதாகக் கூறியதுடன், நடிகை […]
நடிகை த்ரிஷா, நடிகர் கருணாஸ் குறித்துக் கேட்பதற்குக் கூசுகின்ற, ஆதாரமற்ற பொய்க்கதைகள் பரவி வரும் நிலையில், நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சேலம் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, சமீபத்திய பேட்டி ஒன்றில் கடந்த 2017 ஆம் ஆண்டு கூவத்தூர் தனியார் விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்தபோது, நடிகைகள் அழைத்து வரப்பட்டதாகக் கூறியதுடன், நடிகை த்ரிஷா பற்றியும் அவதூறாக பேசினார். இதையடுத்து, நடிகை த்ரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்து திரைபிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த […]
சேலம் மாவட்ட முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ.வி.ராஜு அண்மையில் ஒரு வீடியோவில் , 2017இல் அதிமுக எம்எல்ஏக்கள் இருந்த கூவத்தூர் ரெசார்ட் தொடர்பாக பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கூறி அதிரவைத்தார். அதில் பிரபல நடிகை பற்றியும், அதிமுக நிர்வாகிகள் பற்றியும் பல்வேறு அவதூறு கருத்துக்களை கூறினார். ஏ.வி.ராஜு கூறிய கருத்துக்கு அரசியல் வட்டாரம், சினிமாதுறையினர் என பலர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் ஏ.வி.ராஜு மீது காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற குரல்களும் […]
சென்னை:மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலத்தின் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம், வருமானத்துக்கு அதிக்காகமாக சொத்து சேர்த்ததாக கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி அவரது வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் 13 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணமும், 11 கிலோ தங்கமும்,சந்தன மரத்தில் இருந்து செய்யப்பட்ட பொருட்கள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் […]
சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டங்களை வைத்திருந்ததாக முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மீது வழக்குப்பதிவு. முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மீது தமிழ்நாடு வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டங்களை வைத்திருந்ததாக வழக்குப்பதிவு போடப்பட்டுள்ளது. கடந்த 24 ஆம் தேதி வெங்கடாசலம் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் 13 லட்சத்து 50 ஆயிரம் […]
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வங்கி லாக்கர்களை திறந்து சோதனை செய்ய லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திட்டமிட்டுள்ளனர். 2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்து வரும் வெங்கடாசலம் அவர்களின், இல்லம் மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வெங்கடாசலம் அவர்கள் வருமானத்திற்கு மீறிய சொத்துக்களை சேர்த்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி,அவரது வீட்டில் இருந்து 13.5 லட்சம் பணம்,எட்டு […]
பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட தோப்பு வெங்கடாசலம் முடிவு செய்துள்ளார். வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசிநாள் என்பதால் இன்னும் வேட்புமனு தாக்கல் செய்யாமல் உள்ள வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் அதிமுகவில் தனக்கு வருகின்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார். பெருந்துறை தொகுதி வேட்பாளராக தன்னை அறிவிக்காமல் ஜெயக்குமார் என்பவரை அறிவித்ததால் அதிருப்தி என கூறப்படுகிறது. இன்று பெருந்துறை […]
அதிமுக கட்சியின் ஒரு பகுதியாக செயல்பட்டு வரும் அம்மா பேரவையில் இணை செயலாளராக அதிமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலம் பதவி வகித்து வந்தார்.நேற்று அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக கூறி ராஜினாமை கடிதத்தை முதல்வரிடம் அளித்தார். இதன் பின்னர் அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் கூறுகையில்,அம்மா பேரவை மாநில இணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காகவே விலகுகிறேன் .விலகும் கடிதத்தை முதல்வரிடம் அளித்துவிட்டேன்.இனி முதல்வரே முடிவெடுப்பார் என்று அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.