அரசு வங்கி என்ற அந்தஸ்தே தற்காலிகம் எனச் சொல்வது குறித்து கவலைப்படாமல் அக்னிபத்திற்கு எப்படி நம்பிக்கை கொடுக்கிறார்கள்? என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். மத்திய அரசு கொண்டுவந்த அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், இளைஞர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இப்போராட்டம் வடமாநிலங்களில் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தி வருகின்றனர். ரயில்களுக்கு தீ வைப்பது மட்டுமல்லாமல், பாஜக தலைவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் சூறையாடப்பட்டுள்ளன. அக்னிபத் பிரச்சாரத்தில் […]
மூத்த குடிமகன்களுக்கான ரயில் கட்டண சலுகை நிராகரிப்பு குறித்து வெங்கடேசன் எம்.பி ட்வீட். மூத்த குடிமகன்களுக்கான ரயில் கட்டண சலுகை நிராகரித்துள்ளது அரசாங்கத்தின் செயல் இரக்கமற்றது என்று சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை மீள்வது குறித்து நான் 20.10.2021 எழுதிய கடிதத்திற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் 21.03.2022 அன்று பதில் அளித்துள்ளார். 2020 – 21 […]
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்திய தொல்லியல் துறை மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை சென்னைக்கு மாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். சென்னை அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்ட தமிழக கல்வெட்டுக்கள், நினைவுச்சின்னங்கள் உதகைக்கு மாற்றப்பட்டு, அதன்பின் கடந்த 1966ம் ஆண்டு மைசூருக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் கல்வெட்டுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை சென்னைக்கு இடமாற்றம் செய்யுமாறு உத்தரவிட்டது. அதன்படி […]