தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் வருகின்ற 27-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட உத்தரவில்,வெங்கடேஷ் பண்ணையாரின் 16-வது நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.எனவே அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக நாளை காலை 6 மணி முதல் வருகின்ற 27-ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.