வேலயாத்திரை நிறைவடைந்ததை தொடர்ந்து, 2021-ல் பாஜக தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். கடந்த ஒருமாதமாக பாஜக சார்பாக நடைபெற்று வந்த வேல் யாத்திரை இன்று திருச்செந்தூரில் நிறைவுபெற்றது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்த அரசு அனுமதி மறுத்தது. இருப்பினும், எல். முருகன் தலைமையில் வேல் யாத்திரை நடைபெற்றது. தடையை மீறி வேல் யாத்திரை நடத்திய பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். மழை மற்றும் புயலால் நிறுத்தப்பட வேல்யாத்திரை மீண்டும் சமீபத்தில் […]