விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில், செஞ்சி, வளத்தி, மேல்மலையனூர், நீளாம்மண்டி உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. தொடர் மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் அங்கு தற்போது நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். DINASUVADU