தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் சில முக்கிய பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. பள்ளிகல்லூரிகளுக்கு சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. முதலில் சென்னை பல்கலைக் கழக தேர்வுகள் கனமழை காரணமாக இன்று ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. அடுத்ததாக வேலூரை மையமாகக் கொண்டு இயங்கும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில் நடக்கவுள்ள இன்றைய தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதேபோல, இன்று அதிகாலை முதல் வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், […]
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதில் வேலூரில் மட்டும் 5 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். இதனால் வேலூர் மாவட்டத்தில் 1936 தற்கால ஊழியர்களை பணியமர்த்தி டெங்கு காய்ச்சல் தடுப்பதற்காக வீடு வீடாக தடுப்பு நடவடிக்கைகளை மேக்கொள்ள பணியமர்த்தப்பட்டனர். தற்போது டெங்கு காய்ச்சலால் வேலூர் மாவட்டத்தில் 146 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை அடுத்து நேற்று டெங்கு காய்ச்சல் தடுப்பு பற்றி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த […]
வேலூரில் ரத்ததான மக்களவை தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் மதியம் 3 மணி வரை 52 சதவீத வாக்குப்பதிவுகளுடன் விறுவிறுப்ப்பாக தேர்தல் நடந்து வருகிறது. பணபட்டுவாடா நடப்பதை தடுக்க தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படையினருடன் இணைந்து கட்சிகார்களும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் அதிமுகவை சேர்ந்த வாணியம்பாடி எம்எல்ஏவும், அதிமுக அமைச்சராக உள்ள நிலோபர் கபிலின் உதவியாளரின் வாகனத்தில் வந்த இருவர் வாக்காளர்களிடம் பணப்பட்டுவாடா செய்ய முற்பட்டனர். அப்போது அதனை கண்ட திமுகவினர் […]
பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.இதன் பின்னர் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூரில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.வேலூர் தொகுதியில் 28 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆம்பூரில் இஸ்லாமிய அமைப்பினருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார் .இந்த ஆலோசனை கூட்டமானது ஒரு தனியார் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது . இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக சார்பாக போட்டியிடும் கதிர் ஆனந்தும் கலந்துகொண்டார் இன்று […]
தமிழகத்தில் இனி வரும் 2 அல்லது 6 மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திமுக இளைஞர் அணி தலைவரான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேலூர் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் இந்தியா முழுவதும் வெற்றி பெற முடிந்த மோடி அவர்களால் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை என்று […]
கர்நாடாவை போல தமிழகத்தில் அதிமுக ஆட்சியை கலைத்தால் பந்து மாதிரி தூக்கி போட்டு மிதிப்போம் என்று தமிழக பல்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக பேசியுள்ளார். வேலூர் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அங்கு அரசியல் கட்சி தலைவர்களின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இன்று வேலூர் மாவட்டம் கே.வி குப்பத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகத்தை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி […]
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் அமமுக கட்சியின் ஆதரவு யாருக்கும் இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் நடந்த கூட்டத்தில் இன்று பேசிய அவர், அமமுக கட்சியாக பதிவு செய்த பின்பே இனி வரும் தேர்தலில் போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார். மேலும், தற்போது நடக்கும் வேலூர் தொகுதி தேர்தலில் அமமுக ஆதரவு யாருக்கும் இல்லை என்றும் கூறி இருக்கிறார். அதிமுக அமைச்சர்கள் பலர் தங்கள் கட்சியை சார்ந்த பலரை இழுத்து ஆள் பிடிக்கும் […]
தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் வரும் ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெறுவதாக இருந்த மருத்துவ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா செஷன் தெரிவித்துள்ள செய்தியில், தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகதின் கீழ் இயங்கும் மருத்துவ கல்லூரிகளில் MBBS , பல் மருத்துவம் மற்றும் B.pharm ஆகிய துறைகளுக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அன்றைய தினம் வேலூர் தொகுதிக்கான தேர்தல் நடைபெற […]
வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்ய பாஜக தேசிய தலைவர்கள் நிச்சயம் வருவார்கள் என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் தெரிவித்துள்ளார். கடந்த 2 நாட்களாக டெல்லியில் இருந்த துணை முதல்வர் பன்னிர்செல்வம் இன்று சென்னை வந்தார். அப்போது பேசிய அவர் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்சா அவர்களை புகார் கொடுப்பதற்காக சந்திக்கவில்லை என்றும் அமித்சா உட்பட அனைவரையும் மரியாதையை நிமித்தமாக தான் சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் […]
வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் வேட்புமனு பரிசீலனை இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நடைபெற்றது. அப்போது, திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்க மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். அதிமுக வேட்பாளர் சண்முகம் கலந்து கொள்ளவில்லை. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் , பொருளாளர் துரைமுருகன் உட்பட அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டனர். அதிமுக வேட்பாளர் A .C சண்முகம் வேட்புமனு பரிசீலனையின் போது அங்கு இருந்த பலர், புதிய நீதிக்கட்சியின் தலைவராக […]
வேலூர் தொகுதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கள் இன்று மாலை 3 மணியுடன் நிறைவு பெற்றது. இதுவரை 50 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். பணப்பட்டுவாடா காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த வேலூர் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் நிறுத்தப்பட்டது. இந்தியா முழுவதும் நடந்து முடிந்த தேர்தலில் வேலூரில் மட்டும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வேலூர் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெரும் என்று தலைமை தேர்தலை ஆணையம் அறிவித்தது. ஜூலை 11 […]
வேலூர் வேலூர் மாவட்டம் ராணிகோட்டை அருகேயுள்ள அக்கிராமரம் என்ற இடத்தில் திமுக தொண்டர் ஒருவரின் இல்ல திருமண விழாவுக்கு வந்த திமுக பொருளாளர் துரை முருகன் செய்தியாளர்களிடம் ‘அதிமுக ஆட்சி முடியப்போகிறது’ என்றார். செய்தியாளர்களிடம் பேசிய போது அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர் , இந்த ஆட்சி போகவேண்டுமென்று மக்கள் கருதுகின்றனர்.எல்லா தரப்பு மக்களும் இந்த ஆட்சி என்று தொலையும் என்று கருதுகிறார்கள் மக்களுடைய விருப்பம் விரைவில் நிறைவேறும் என்று திமுக பொருளாளர் துரை முருகன் […]
வேலூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டையின் அருகே சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் விரைவு ரயிலில் 750 மூட்டை அரிசி கடத்தல் செய்யப்பட்டது. இதனை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். ரேசன் அரிசியை பரிமுதல் செய்து, அந்த 750 மூட்டை அரிசி நுகர்பொருள் வாணிய கிடங்கில் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். இந்த கடத்தல் சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
வேலூர்: சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு கடத்த முயன்ற 200 கிலோ ரேசன் அரிசி ஜோலார்பேட்டை ரயில்நிலையத்தில் சிக்கியது.பின்பு பறிமுதல் செய்த அரிசியை திருப்பத்தூர் நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். மேலும் ரேசன் அரிசியை கடத்திவந்தது யார் என்பது குறித்தும் ரயில்வே போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.