சாதி சான்றிதழ் வழங்குவதில் உள்ள சிக்கல்களை தீர்க்க தனி ஆணையம் அமைக்க வேண்டும். இறந்தவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அவரது குடும்பத்தாருக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அறிக்கை மூலம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். காஞ்சிபுரம் படப்பையைச் சேர்ந்தவ கூலித் தொழிலாளி வேல்முருகன் தனது 10ம் வகுப்பு படிக்கும் மகனின் கல்விக்காக சாதிச் சான்றிதழ் கோரி 5 ஆண்டுகளாக ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து […]