வேலூர் பெண்கள் தனிசிறையில் இருந்து விடுதலையானார் நளினி. பரோலை ரத்து செய்யக்கோரி வேலூர் மத்திய சிறை நிர்வாகத்திடம் நளினி கடிதம் அளித்த நிலையில், தற்போது விடுதலையானார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து சிறை நிர்வாகத்திடம் கடிதம் அளித்தார் நளினி. கிட்டத்தட்ட 31 ஆண்டுகளுக்கு பின் தனிசிறையில் இருந்து விடுதலையானார் நளினி. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், […]