பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி சண்முக சுந்தரம், காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமாருடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனை நடத்த உள்ளார். காணொலி காட்சி மூலம் மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்
வேலூர் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று ஏ.சி. சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற உள்ளதுமூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.இதனால் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் வேலூர் தொகுயில் புதிய நீதிக் […]