வேலூர் : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய், கடந்த அக்டோபர் மாதம் தனது கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். அதனை அடுத்து, அம்பேத்கர் புத்தக வெளியிட்டு விழாவில் பேசினார். மேற்கண்ட 2 மேடை பேச்சுக்களை தவிர்த்து ஒரு சில நிகழ்வில் மட்டுமே மக்களை நேரடியாக சந்தித்துள்ளார் விஜய். இந்நிலையில் மக்களை நேரடியாக எப்போது சந்திப்பார் என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்தது. விஜய் சுற்றுப்பயணம் எதுவும் செல்வாரா? விக்கிரவாண்டி மாநாடு போல, […]
வேலூர் : கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கே.வி.குப்பம் அருகே சாலை விபத்தில் சிக்கியது போல மர்மமான முறையில் படுகாயமுற்று இருந்த வேலூர் மாவட்ட ஆலய மேம்பாட்டு பிரிவு நிர்வாகி விட்டல்குமார் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விட்டல்குமார் உயிரிழப்பு கொலை என்றும் இதற்கு வேலூர் மாவட்டம் நாகல் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பாலா சேட் என்பவர் தான் காரணம் என்றும் பாஜகவினர் வேலூர் அரசு மருத்துவமனையில் தொடர் […]
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை மும்மரமாகச் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று வேலூர் மாவட்டத்தின் காட்பாடி தொகுதியில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் தி.மு.க தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டார்கள். இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன் தன்னை கொல்ல வந்தார்கள் என்றால் கூட அவர்களை […]
வேலூர் : இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணிக்கு ஆள் வேண்டும் என வேலைவாய்ப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியீட்டுள்ளது. இந்த வேலை தொடர்பான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த 09-08-2024 முதல் தொடங்கியது. கடைசி தேதி வரும் 31-08-2024 வரை உள்ளது. எனவே கீழே வரும் விவரங்களை படித்துவிட்டு விருப்பம் இருந்தால் வேலைக்கு விண்ணப்பம் செய்துகொள்ளுங்கள். காலியிடங்கள் விவரம் பதவியின் பெயர் எண்ணிக்கை ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ 1 தேவையான கல்வித்தகுதி ஜூனியர் ரிசர்ச் […]
வேலூர் : நாளை (ஆகஸ்ட் 03/08/ 2024) வேலூர் மாவட்டத்தில் எந்த பகுதிகளில் எல்லாம் மின்தடை ஏற்படும் என்பது குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதில், உங்கள் பகுதி இருக்கிறதா? என்று பார்த்து அறிந்து கொள்ளுங்கள். சோளிங்கர் பானாவரம், கரிகால், வி.ஜி.புரம், தளிகல், எறும்பி, கொண்டபாளையம், கரிகால் மற்றும் சோளிங்கர் சுற்றுவட்டாரப் பகுதிகள் மேல்வெங்கடபுரம் கொடைக்கல், ரேனாண்டி, ஜம்புகுளம், மருதாலம், பாலகிருஷ்ணாபுரம், புலிவலம், பாலகிருஷ்ணாபுரம், சூரை மற்றும் எம்.வி.புரம் சுற்றுவட்டாரப் பகுதிகள் முகுந்தராயபுரம் நெல்லிக்குப்பம், லாலாப்பேட்டை, கல்மேல்குப்பம், தக்கன்பாளையம் […]
Mansoor Ali Khan : வாக்குச்சாவடியில் தனது பலாப்பழ சின்னம் மீது வெளிச்சம் இல்லை என மன்சூர் அலிகான் வாக்குவாதம். இன்று (ஏப்ரல் 19) இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழகத்தில்39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கே தொடங்கிய நிலையில், பொது மக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாக்கு […]
Mansoor Ali khan: பிரச்சாரத்தின் போது திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாளை மறுநாள் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்றைய தினம் அனைத்து கட்சி தலைவர்களும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது, திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டு, வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் […]
Job Vacancy : CMC-கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில், மருத்துவ அதிகாரி மற்றும் லேப் டெக்னீஷியன் வேலைக்கு ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்கு மொத்தம் 10 காலியிடங்கள் உள்ளன. இந்த பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அரசாங்கத்தில் நிலையான வேலை தேடும் மற்றும் தங்கள் சமூகத்திற்கு சேவை செய்வதில் ஆர்வமுள்ள தனிநபர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். மேலும், இதை பார்த்ததும் செல்லாமல் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் இதை பகிருங்கள். READ MORE – அரக்கோணம் […]
அதிமுக முன்னாள் அமைச்சர் KP. அன்பழகனின் மருமகள் பூர்ணிமா (30) இன்று மரணம் அடைந்தார். ஜனவரி 18ஆம் தேதி தர்மபுரியில் உள்ள தனது வீட்டில் பூர்ணிமா விளக்கு ஏற்றியுள்ளார். அப்போது அவரது ஆடையில் தீப்பிடித்ததில் பலத்த தீக்காயம் அடைந்தார். இந்த தீ விபத்தில் அவருக்கு 40% மேல் தீ காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. அதனையடுத்து வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூர்ணிமா சிகிச்சை பெற்று வந்தார். மேலும், தீ விபத்து சம்பவம் குறித்து வாக்குமூலம் அடிப்படையில் […]
கனமழை காரணமாக தமிழ்நாட்டில் நான்கு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், புயல் மற்றும் கனமழை காரணமாக வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு […]
மாண்டஸ் புயல் எதிரொலி வேலூர் மாவட்டத்தில் இன்று மதியமும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. மாண்டஸ் புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் இன்று மதியமும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மாண்டஸ் புயல் எதிரொலியாக மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, புயல் எச்சரிக்கை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை […]
நளினி விடுதலை தொடர்பான உத்தரவு நகல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என சிறைத்துறை தகவல். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிசந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகிய 6 பேர் நன்னடத்தை, சிறையில் கல்வி கற்றது, பரோல் விதிமுறை, ஆளுநரின் தாமதம் ஆகியவற்றின் அடிப்படையில் விடுதலை செய்ய நேற்று உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியிருந்தது. இந்த நிலையில், நளினி விடுதலை தொடர்பான […]
புகழ் பெற்ற வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் ராகிங் புகாரில் ஏழு மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் ராணிப்பேட்டை கிறிஸ்டியன் மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை, சீனியர் மாணவர்கள் ராகிங் செய்யும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . அதில் முதலாம் ஆண்டு மாணவர்களை, சீனியர்கள் மிரட்டி தண்டால் எடுக்க செய்வது,தண்ணீரை பீச்சி அடிப்பது,அரை டவுசருடன் ஓட விடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து புகார்கள் எழுந்த நிலையில், ஏழு சீனியர் […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று திருப்பத்தூர்,வேலூர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.அதன்படி,இன்று காலை 9 மணிக்கு திருப்பத்தூர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலக வளாகத்தை முதல்வர் திறந்து வைக்கவுள்ளார்.இதனைத் தொடர்ந்து,டான் போஸ்கோ பள்ளியில் நடைபெறும் அரசு விழாவில், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து,புதிய திட்டப்பணிகளுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். அதன்பின்னர்,அரசின் நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கி முதல்வர் உரையாற்றவுள்ளார். இதனையடுத்து,நண்பகல் 12.15 மணிக்கு வேலூர் மாவட்டத்தில் புதிய நகர பேருந்து […]
வேலூரில் காதலனை தாக்கி இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு. வேலூர் கோட்டை பூங்காவில் இளம்பெண்ணை வன்கொடுமை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, வேலூர் கஸ்பாவை சேர்ந்த மணிகண்டன், வசந்தபுரம் சக்திவேல் ஆகியிருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் மூன்றாவது குற்றவாளியான மாரிமுத்து என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த […]
பெண் மருத்துவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேர் மீது குண்டாஸ் சட்டம். வேலூரில் பெண் மருத்துவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது. பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் உள்ள மணிகண்டன், சந்தோஷ், பார்த்திபன், பரத் ஆகிய 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலூரில் மார்ச் 17-ஆம் தேதி ஷேர் ஆட்டோவில் சென்ற பெண் மருத்துவர் கூட்டு பாலியல் […]
வேலூரிலிருந்து 50கி.மீ தொலைவில் மேற்கு-வடமேற்கு பகுதிகளில் 3.5 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு. வேலூர் அருகே சில இடங்களில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சித்தூரில் ஏற்பட்ட நில அதிர்வு வேலூர் அருகே சில இடங்களில் உணரப்பட்டது. வேலூரிலிருந்து 50 கிலோமீட்டர் மேற்கு- வடமேற்கு பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டது என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 3.5 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு […]
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த கெங்கநல்லூர் ஊராட்சி வாக்குச்சாவடியில் நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட தேர்தலானது கடந்த 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 74.37 சதவீத வாக்குகள் பதிவானது. இதனையடுத்து,9 மாவட்ட ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணி முதல் […]
நீட் தேர்வு தோல்வி பயத்தால் வேலூரைச் சேர்ந்த செளந்தர்யா என்ற மாணவி தற்கொலை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ சேர்க்கைகான நீட் தேர்வு கடந்த 12 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகத்திலிருந்து 1.10 லட்சம் பேர் எழுதியிருந்தனர். இதற்கிடையில்,சேலம் மாவட்டம் கூழையூரைச் சேர்ந்த விவசாயி சிவக்குமாரின் இரண்டாவது மகன் தனுஷ் என்பவர் ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி அடையாத நிலையில்,இந்த முறை நீட் தேர்வை எதிர்கொள்ள அச்சப்பட்டு தேர்வு […]
ஆக்சிஜன் பற்றாக்குறையால் 7 பேர் உயிரிழந்ததாக எழுந்த புகார் பற்றி வேலூர் அரசு மருத்துவமனை அறிக்கைதர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் விநியோக குளறுபடியால் அடுத்தடுத்து 7 பேர் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. அதில் கொரோனா வார்டில் 4 பேரும், பொது வார்டில் மூன்று பேரும் நேற்று உயிரிழந்தனர். 7 பேர் உயிரிழப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை என புகார் எழுந்தது. ஆனால், இந்த உயிரிழப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என மருத்துவமனை நிர்வாகம் மற்றும் […]