முக்கொம்பு பழைய பாலம் இடிந்தற்கு முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்துவது நகைச்சுவையாக உள்ளது என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று முக்கொம்பு அணையை ஆய்வு செய்தார்.அப்பொழுது பேசிய ஸ்டாலின் பாலம் இடிந்தற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பழைய பாலம் இடிந்ததற்கு முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்துவது நகைச்சுவையாக உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பதிலளித்துள்ளார். […]