கொடியேற்றத்துடன் தொடங்கிய வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா!
வேளாங்கண்ணி மாதா பேராலய கோவில் திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலய கோவில் திருவிழா, ஆகஸ்ட் 29- ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 8- ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆனால் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக, கொடியேற்றத்தில் பங்கேற்க மக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், மக்கள் காணொளி மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மக்கள் பங்கேற்பின்றி திருப்பலி நடைபெற்றது. அதனைதொடர்ந்து, […]