Veerapan Daughter: நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வித்யா தேர்தலில் போட்டியிடுகிறார். சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யாராணி சில ஆண்டுகளுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். பாரதிய ஜனதாவில் தனக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என அவர் எதிர்பார்த்த நிலையில் கிடைக்கவில்லை. Read More – பாஜக வென்றால் இந்த நிலை ஏற்படும்! மு.க. ஸ்டாலின் பேச்சு இந்த நிலையில் மக்களவை தேர்தலை முன்னிட்டு மீண்டும் அவரது அரசியல் […]
வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் 30 ஆண்டுகளுக்கு பின் கோவை சிறையில் இருந்து விடுதலை. கோவை சிறையில் ஆயுள் கைதிகளாக இருந்த வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் ஆளுநர் கையெழுத்திட்டதால் விடுதலை செய்யப்பட்டனர். அதன்படி, வீரப்பன் கூட்டாளிகளான ஆண்டியப்பன், பெருமாள் ஆகிய இருவரும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள வீரப்பன் கூட்டாளிகளை விடுதலை செய்யுமாறு மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் தமிழக அரசின் […]
வீரப்பன் அண்ணன் மாதையன் உடல்நலக்குறைவால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் கர்நாடகாவில் வழக்கு ஒன்றில் மாதையன்,கைது செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் கர்நாடக சிறையில் தண்டனையை அனுபவித்த நிலையில்,அந்த வழக்கு நிறைவடைவதற்கு முதல் நாள்,தமிழக வனச்சரகர் சிதம்பரம் கொலை வழக்கில் அவர் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கொலை வழக்கில் 35 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை பெற்று வந்த பாதையன் வர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில்,நெஞ்சுவலி ஏற்பட்டதால் கடந்த மே […]
தமிழகம்:34 ஆண்டுகளாக சிறையில் வாடும் வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன் மாதையன் எந்த குற்றமும் இழைக்கவில்லை;அவரை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களின் 113 வது பிறந்த நாளையொட்டி 700 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக சட்டப் பேரவையில் கடந்த 13.09.2021 அன்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து,சிறைக் கைதிகளின் முன்விடுதலை தொடர்பான சட்டம் மற்றும் […]
கடந்த 2004ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சந்தனக்கடத்தல் வீரப்பன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பகுதி கொரோனா பரவல் காரணமாக அஞ்சலி செலுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.ஆனால் நேற்றைய தினம் தடைகளை மீறி சமூக விலகலை கடைப்பிடிக்காமல் பலர் அஞ்சலி செலுத்திய காரணத்தால் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, வீரப்பனின் இளைய மகள் பிரபாவதி, பாஜக மாநில இளைஞரணி நிர்வாகியான வித்யாராணி உள்ளிட்ட 100 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தியது பெரும் பரபரப்பை […]
சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணிக்கு மாநில இளைஞர் அணி துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் கிருஷ்ணகிரியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் வீரப்பனின் மகள் வித்யா ராணி பாஜகவில் இணைந்தார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச் செயலாளர் முரளிதர் ராவ், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். இந்நிலையில், மாநில இளைஞர் அணி துணைத் தலைவராக வீரப்பனின் மகள் வித்யா ராணி நியமனம் செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் பாஜகவில் இணையும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சந்தன கடத்தல் வீரப்பன் மகள் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். சந்தன கட்டைகள் கடத்தல் வீரப்பன் மற்றும் அவரது மனைவி முத்துலட்சுமி இருவருக்கும் விஜயலட்சுமி, வித்யா ராணி என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் வித்யா ராணி என்பவர் வழக்கறிஞராக உள்ளார். இவர் தற்போது பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் மற்றும் பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் தன்னை […]