குஜராத்தில் தனது காதலனுக்காக தேர்வெழுத சென்று தனது கல்லூரி பட்டத்தை ஒரு பெண் இழந்துள்ளார். காதலனும் 3 ஆண்டுகள் தேர்வெழுத கூடாது என கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. குஜராத் வீர் நர்மத் தெற்கு குஜராத் பல்கலைக்கழகத்தில் (VNSGU) 3ஆம் ஆண்டு பிகாம் படிக்கும் மாணவன் ஒருவர் உத்தராகாண்ட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அந்த சமயம் தேர்வெழுத வேண்டி இருந்ததால், அந்த மாணவனுக்கு பதில் அவரது காதலி பரீட்சை எழுதியுள்ளார். அந்த மாணவனது ஹால் டிக்கெட்டில் அவரது புகைப்படத்திற்கு […]