கேரளா : வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 100க்கும் மேப்பட்டோர் பேரை காணவில்லை என கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட்டிற்கு நேரில் சென்று பார்வையிடுவதற்காக இன்று காலை வயநாடு செல்லும் வழியில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சென்ற கார் விபத்தில் சிக்கியது. மஞ்சேரி அருகே அவரது கார் கட்டுபாட்டை இழந்து மீன் கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக […]
வயநாடு நிலச்சரிவு : கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட 3 பெரிய நிலச்சரிவுகள் அம்மாநிலத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது வரையில் 60ஐ கடந்துள்ளது. மேலும், மீட்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலச்சரிவில் சாலைகள் , பாலங்கள் மூழ்கியதால் பல்வேறு இடங்களில் மீட்புப்பணிகள் கடுமையான சவால்களை எதிர்கொள்கின்றன. மீட்பு பணிகளில் கேரள மீட்புப்படையினர் மட்டுமல்லாது, தேசிய மீட்புப்படையினர், இந்திய […]
கடந்த சில மாதங்களாக குறைவான எண்ணிக்கையில் பதிவாகிவந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனாவின் மற்றொரு திரிபான ஓமிக்கிரான் வைரஸ் ஜேஎன்-1 வகை வைரஸ் தொற்றானது தற்போது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த புதிய திரிபானது வயதானவர்களுக்கும், வேறு நோய் தொற்றுகள் உள்ளவர்களுக்கும் சிக்கலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு, ஒரே நாளில் 752ஆக அதிகரித்துள்ளது. அதில், கேரளாவில் அதிகபட்சமாக 265 பேர் கொரோனாவால் […]
இந்தியாவில் முதன்முதலாக குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட நபர் பூரண நலம் பெற்று விட்டதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனாவை தொடர்ந்து குரங்கம்மை நோய் ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் முதன்முதலாக கேரளாவை சேர்ந்த நபருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில், 35 வயதான அந்த நபர் தற்போது […]
கேரளாவில் ஏற்கனவே ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியான நிலையில், மேலும் ஒருவருக்கு பாதிப்பு. கேரளாவின் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல் தெரிவித்துள்ளார். குரங்கு அம்மை உறுதியான 31 வயதான நபர் அண்மையில் துபாயில் இருந்து கேரளா திரும்பியவர் என தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் முதல் குரங்கு அம்மை தொற்று கேரளாவில் […]
நிபா வைரஸ் தொற்று காரணமாக கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் 68 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கேரளாவில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிபா வைரஸ் தொற்று தற்போது மீண்டும் அங்கு பரவியுள்ளது. இந்த தொற்றால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 12 வயதுடைய சிறுவன் உயிரிழந்தான். கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த இந்த சிறுவன் நிபாவால் உயிரிழந்ததை தொடர்ந்து இவனுடைய தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை எடுக்கப்பட்டு புனேவில் உள்ள கிருமியியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள […]
கேரளாவில் ‘அம்மையும் குஞ்சும்’ என்ற வாட்ஸ் அப் குரூப்பை தொடங்கி மக்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளார் பெண் எம்.எல்.ஏ. வீணா ஜார்ஜ். கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அரன்முலா தொகுதியில் ‘அம்மையும் குஞ்சும்’ (தாயும்-குழந்தையும்) என்ற வாட்ஸ் அப் குரூப்பை தொடங்கி மக்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளார் பெண் எம்.எல்.ஏ. வீணா ஜார்ஜ். இந்த வாட்ஸ் அப் குரூப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளை வைத்துள்ள தாய்மார்கள் என பலரும் இணைந்து எளிய முறையில் மருத்துவர்களிடம் […]