வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவைக் குறைக்கும் முடிவை திரும்பப் பெறுகிறது தமிழ்நாடு அரசு. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவை குறைக்கும் முடிவை திரும்பப் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது தேசிய வன உயிர் வாரியத்திடம் வழங்கப்பட்ட விண்ணப்பத்தை திரும்ப பெறப்படுவதாக தலைமை காட்டுயிர் பாதுகாவலர் நீரஜ், துறையின் முதன்மை செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். சரணாலயத்தின் சுற்றளவை 5 கி.மீல் இருந்து 3 கி.மீ-ஆக குறைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் வாபஸ் பெறப்பட்டது. […]
தொழில் நிறுவனத்திற்கான இட ஒதுக்கீட்டுக்கு அனுமதி மறுப்பு. இந்தியாவில் முக்கியச் சரணாலயங்களில் ஒன்றாகக், செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திகழ்கிறது. இங்கு ஆண்டுதோறும் வெளிநாட்டுப் பறவைகள் வந்து முட்டையிட்டு குஞ்சு பொறித்துச் செல்லும். மேலும், இந்த சரணாலயப் பகுதி மத்திய வனவிலங்கு பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பகுதியை, சுருக்கி ஆணை வெளியிடப்படுவதாகவும், தொழிற்சாலைகள் நடத்த அனுமதிக்கப்படுவதாகவும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார். இதனையடுத்து, சன் ஃபார்மா […]
5 கி.மீ. சுற்றளவு கொண்ட வேடந்தாங்கல் பறவைகள் வாழிடப்பகுதியை 3 கி.மீ. அளவுக்கு சுருக்குவதா? தமிழக அரசு மருந்து தொழிற்சாலை விரிவாக பணிகளுக்காக தேசிய காடுகள் உயிர் இயல் வாரியத்திடம் 5 கி.மீ. சுற்றளவு கொண்ட வேடந்தாங்கல் பறவைகள் வாழிடப்பகுதியை 3 கி.மீ. அளவுக்கு சுருக்குவதற்காக கோரிக்கை விடுத்துள்ளது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த வைகோ, 5 கி.மீ. சுற்றளவு கொண்ட வேடந்தாங்கல் பறவைகள் வாழிடப்பகுதியை 3 கி.மீ. அளவுக்கு சுருக்குவதா? வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தமிழக […]