தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் இறுதி விசாரணையை வரும் 20ம் தேதிக்கு தள்ளி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆலை மூடலுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான இறுதி விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று தொடங்கியது. அதன்போது கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஆலையை மீண்டும் இயக்குவது தொடர்பாக நிபுணர் குழுவை அமைக்கலாம் என்ற யோசனையை உச்சநீதிமன்றம் முன் வைத்தது. மேலும், தற்போது உள்ள இடத்தில் அமைந்துள்ள காப்பர் தொழிற்சாலை […]
வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் ஸ்டெர்லைட்க்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து மே 22ல் போராட்டத்தில் துப்பாக்கிசூடு நடத்தி 13 பேர் உயிரிழந்தனர். மே 28 ல் நீர், நிலம், காற்றுக்கு பாதிப்பு விளைவிளைக்கும் என்று கருதி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. நிபுணர் குழு அறிக்கை அடிப்படையில் ஆலையை திறக்க டிசம்பர் மாதம் பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. […]