தனது தொகுதி மக்களுக்காக ஜீப்களை வழங்கிய ராகுல்காந்தி. கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள், அந்த தொகுதியின் குடும்ப சுகாதார மையத்திற்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கி 2 ஜீப்களை வழங்கி உள்ளார். மேலும் ஜீப்கள், பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், சுகாதார சேவைகள் அனைவருக்கும் சென்று சேருவதை உறுதி செய்யும் நோக்கிலும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளநீர் புகுந்துள்ளது. தேயிலை தோட்டங்கள் வழியே வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. வயநாட்டில் மேப்பாடி, புதுமலை ஆகிய பகுதிகளில் கனமழையின் காரணமாக, கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் பல வீடுகள், மக்கள் வழிபாட்டு தளங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இந்த நிலச்சரிவில் சுமார் 40கும் மேற்பட்டவர்களை காணவில்லை என அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. இவர்களை மீட்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதம் […]
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு மக்களவை தொகுதியில் நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார். இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக இந்தியாவில் உள்ள பிரதான கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே தேர்தலையொட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,கேரள காங்கிரஸ் கமிட்டியின் கோரிக்கையை ஏற்று, கேரளா வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார் என்று ஏ.கே.அந்தோணி கூறினார். […]