புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும் வாட் வரியை அதிகரித்து அதனை ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு கொண்டு வர உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அண்டை மாநிலங்களுக்கும் புதுச்சேரிக்கும் இடையேயான பெட்ரோல், டீசல் விலை வித்தியாசமும் குறையும். புதுச்சேரியில் பெட்ரோல் மீதான வாட் வரி 14.55%-லிருந்து 16.98%ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, காரைக்காலில் 14.55%லிருந்து 16.99%ஆகவும், மாஹேவில் 13.32%லிருந்து 15.79%ஆகவும், ஏனாமில் 15.26%லிருந்து 17.69%ஆகவும் […]