குஜராத்தில் தேர்தலுக்கு முன்பாக எரிவாயு மீதான வரிகளை குறைத்துள்ளது பாஜக தலைமையிலான அரசு. விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள குஜராத் மாநிலத்தில் சமையல் எரிவாயு மற்றும் வாகன எரிவாயு மீதான வரியை குறைத்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வாகனங்களின் பயன்படும் சிஎன்ஜி மற்றும் வீடுகளுக்கு குழாய் மூலம் விநியோகம் ஆகும் எரிவாயு மீதான வாட் வரி 10% குறைக்கப்பட்டுள்ளது. குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டிய நிலையில், இமாச்சலப்பிரதேசத்துக்கு […]
பொதுவாக சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.இந்நிலையில்,சென்னையில் இன்று 23-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்த போதிலும் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கும் மேலாக, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் எண்ணெய் நிறுவனங்கள் செய்யவில்லை.எனினும், பெட்ரோல்,டீசல் ரூ.100-ஐ விட்டு குறைக்கப்படாமல் இருப்பது வாகன ஓட்டிகளை பெரும் சிரமத்திற்கு […]
தமிழகம் தெலுங்கானா,மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் எரிபொருள் மீதான வாட் வரியைக் குறைக்கவில்லை எனவும்,இதன்காரணமாகவே பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.மேலும்,தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் வாட் வரியை குறைத்து மக்களை சிரமத்திலிருந்து மீட்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி நேற்று அறிவுறுத்தியிருந்தார். பிடிஆர் பதிலடி: இதனைத் தொடர்ந்து,தமிழக நிதியமைச்சர் பிடிஆர்,கடந்த 8 ஆண்டுகளில் கலால் வரியானது பெட்ரோல் மீது சுமார் 200% அளவுக்கும்,டீசல் மீதான கலால் வரி 500% அளவுக்கும் மத்திய […]
வாட் வரி உள்ளிட்ட அனைத்துக்கும் மாநில அரசுகள் மீது பழி சுமத்துகிறார் பிரதமர் என ராகுல்காந்தி ட்வீட். மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு வாட் வரியை குறைத்தது போன்று, தமிழகம் தெலுங்கானா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் எரிபொருள் மீதான வாட் வரியைக் குறைக்கவில்லை. இதன் காரணமாகவே பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. மத்திய அரசின் […]
இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.அப்போது,கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு வாட் வரியை குறைத்தது போன்று,தமிழகம் தெலுங்கானா,மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் எரிபொருள் மீதான வாட் வரியைக் குறைக்கவில்லை எனவும், இதன்காரணமாகவே பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.மேலும்,தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் வாட் வரியை குறைத்து மக்களை சிரமத்திலிருந்து மீட்க வேண்டும் என்று பிரதமர் […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் பெட்ரோலுக்கு 1%, டீசலுக்கு 2% வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 10 ரூபாயும் குறைத்தது. மேலும், மாநில அரசுகள் வாட் வரியை குறைத்து கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டது. இதனை அடுத்து பல்வேறு […]
சென்னையில் 2 வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.அந்த வகையில்,தமிழகத்தில் இந்த வருட தொடக்கத்திலிருந்து பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூபாய் 100 க்கு மேல் விற்பனையாகி வந்தது.தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு […]
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி நாளை முதல் முறையே ₹ 5 மற்றும் ₹ 10 குறைக்கப்படும் என்று தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு அறிவித்துள்ளது.எரிபொருள் விலையேற்றத்தின் பாதிப்பால் தத்தளிக்கும் மக்களுக்கு இந்த அறிவிப்பு தீபாவளி பரிசாக அமைந்துள்ளது. டீசல் மீதான கலால் வரி குறைப்பு பெட்ரோலை விட இருமடங்காக குறைக்கப்பட உள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இரு எரிபொருட்கள் மீதான மதிப்பு கூட்டு வரியை (வாட்) குறைக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
டெல்லியில் டீசல் மீதான வாட் வரி, 16.75 சதவீதமாக குறைப்பு. டெல்லியில் கடத்த சில தினங்களாக பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகரித்து காணப்பட்டது. இதன்காரணமாக அம்மாநில முதல்வர், டீசல் மீதான வாட் வரியை குறைத்து உத்தரவிட்டார். அதன்படி, டெல்லி அரசாங்கம் டீசல் மீதான வாட் வரி, 30 சதவிதத்திலிருந்து 16.75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் டீசல் லிட்டருக்கு ரூ.8 விலை குறையும் எனவும், ஒரு லிட்டருக்கு ரூ. 82-க்கு விற்கப்பட்ட டீசல், இனி […]
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் வாட் வரி வசூல் சரிந்தது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநிலங்களின் மதிப்பு கூட்டு வரி வசூல் குறித்து, PRS என்ற நிறுவனம் ஆய்வு நடத்தியது. அந்த ஆராய்வில் பிற மாநிலங்களை விட, தமிழகத்தில் 61% வரிவசூல் குறைந்துள்ளதாக தெரிவிக்கிறது. பெட்ரோல், டீசல் […]