40 வருடங்கள் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க காரணம் என்ன மூலவரின் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அனைத்து கோவில்களிலும் மூலவர் சிலை கருவறைக்குள் இருக்கும் ஆனால் அத்திவரதர் மூலவர் சிலையானது தெப்பக்குளத்திற்குள் இருக்கும். மேலும் திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்றால் அத்தி வரதரை தரிசிக்க 40 வருடங்கள் காத்திருக்க வேண்டும். ஸ்ரீரங்க ரங்கநாதர் மற்றும் திருப்பதி வெங்கடாசலபதி கோவில்களுக்கு முன்பு தோன்றியது காஞ்சிபுரம் வரதராஜன் கோவிலாகும் […]
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து பல்லக்கில் கோவிலிலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட வரதராஜ பெருமாள் வாலாஜாபாத், முத்தியால்பேட்டை, அய்யன்பேட்டை, வழியாக மண்டகப்படி கண்டருளி பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலை மீது எழுந்தருளினார். சுவாமி பார்வேட்டைக்கு வரும்போது வடகலை, தென்கலை சார்ந்தவர்கள் “திவ்ய பிரபஞ்சம்” படுவது வழக்கம். இதில் வடகலை தென்கலை பிரிவினர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக யார் முதலில் திவ்ய பிரபஞ்சம் பாடுவது என்ற பிரச்னை உள்ளது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டு காலமாக […]