கிராம நிர்வாக ஊழியரை காலில் விழ வைத்த சம்பவம் தொடர்பான விசாரணை நிறைவுற்ற நிலையில், இன்று மாலை ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தகவல். கோவை மாவட்டம், ஒற்றர்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில், கோபிநாத் என்பவர் வந்துள்ளார். இவர் நிலம் சம்பந்தமான சில விவரங்களை கேட்டறிவதற்காக வந்துள்ளார். அப்போது விஏஓ கலைச்செல்வி சரியான ஆவணங்கள் இல்லாததால், சரியான ஆவணங்களை கொண்டு வருமாறு கூறியுள்ளார். இதனால், கோபமடைந்த கோபிநாத் விஏஓ கலைச்செல்வியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அப்போது, தகராறில் ஈடுபடும் […]
கோவை மாவட்டம், ஒற்றர்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில், கிராம நிர்வாக ஊழியரை காலில் விழ வைத்த கொடூரம். கோவை மாவட்டம், ஒற்றர்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில், கோபிநாத் என்பவர் வந்துள்ளார். இவர் நிலம் சம்பந்தமான சில விவரங்களை கேட்டறிவதற்காக வந்துள்ளார். அப்போது விஏஓ கலைச்செல்வி சரியான ஆவணங்கள் இல்லாததால், சரியான ஆவணங்களை கொண்டு வருமாறு கூறியுள்ளார். இதனால், கோபமடைந்த கோபிநாத் விஏஓ கலைச்செல்வியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அப்போது, தகராறில் ஈடுபடும் வண்ணம் நடந்துள்ளார். அப்போது விஏஓ-வின் உதவியாளரான முத்துசாமி […]
உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணமாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு. திருச்சி ஸ்ரீரங்கம் வட்டம் சிறுகமணி மேற்கு கிராமத்திலுள்ள சேதுரப்பட்டி அரசினர் பொறியியல் கல்லூரியில், விமானம் மூலம் வெளிநாட்டிலிருந்து வந்த பயணிகள், தனிமைப்படுத்தப்பட்டு அங்கு தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்களை கண்காணிக்கும் பணியிலிடப்பட்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் குமார் என்பவர் கடந்த 13 ஆம் தேதி அன்று தன்னுடைய பணியை முடித்து வீடு திரும்பும்போது மதுரை – சென்னை […]
2016-ம் ஆண்டு நடந்த விஏஓ தேர்வில் இளையான்குடி மையத்தில் முறைகேடு நடந்ததாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2016-ம் ஆண்டு நடந்த விஏஓ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு வேலை வாங்கியதாக 2 விஏஓ-க்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரியை சேர்ந்த பன்னீர்செல்வம்,சென்னையைச் சேர்ந்த செந்தில்ராஜ் என்ற கபிலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் .இடைத் தரகர் ஜெயகுமாரிடம் ரூ.7 லட்சம் கொடுத்து, தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் காலியாக இருக்கும் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்களில் ஒய்வு பெற்ற அதிகாரிகளை நியமிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு விளக்கம் கேட்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 12,616 கிராம நிர்வாக பணியிடங்களில் 2,896 பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன. அந்த காலி பணியிடங்களுக்கு முறையாக தேர்வு நடத்தாமல் ஒய்வு பெற்ற அதிகாரிகளையே மாதம் 15,000 ரூபாய் ஊதியத்தில் மீண்டும் பணியில் அமர்த்த கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு, தெரிவித்து […]
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி IV மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (VAO) தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூன் 14ம் தேதி தொடங்கி ஜூலை 14 ம் தேதி வரை www.tnpsc.gov .in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வானது செப்டம்பர் மாதம் 1 ம் தேதி நடைபெறும் என்று TNPSC நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு முதல் கிராம நிர்வாக அலுவலர்க்கான தேர்வும் நடைபெறுகிறது. கல்வித் தகுதி , வயது, கட்டணம் […]
தமிழகத்தில் வி.ஏ.ஓ.க்கள் காலவரையற்ற போராட்டத்திற்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜனவரி 17 ஆம் தேதி அறிவித்துள்ள வி.ஏ.ஓ.க்கள் காலவரையற்ற போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். அரசு சான்றிதழ் கோரும் பல விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ள நிலையில் போராட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என அந்த மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று இரவு முதல் விஏஓக்கள் தர்ணா செய்ய முடிவு செய்துள்ளனர் . திருவண்ணாமலை, ஜன.8: தமிழக அரசின் வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் ஆன்லைன் மூலம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய சான்றுகளுக்கு ஒப்புதல் வழங்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அரசு சார்பில் மடிக்கணினியும், இணையதள சேவைக்கு மோடமும் வழங்கப்பட்டு, அதற்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை இணையதளக் கட்டணத்தை அரசு செலுத்தவில்லை. இதையடுத்து, இணையதள கட்டணத்திற்கு பணம் வழங்கக் […]
சென்னை: பல்வேறு மாவட்டங்களில் பணிபுரியும் வி.ஏ.ஓக்கள் தங்களின் சொந்த ஊருக்கே மாற்ற வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று தமிழகம் முழுவதும் பல அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. அதில் ஒன்றாக பகுதிநேர ஆசிரியர்கள் சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனால், இன்று பள்ளிக்கு வராத பகுதிநேர ஆசிரியர்களை கணக்கெடுத்து வருகிறது பள்ளிகல்வித்துறை. இன்னொரு போராட்டமானது, தமிழகத்தை சேர்ந்த விஏஓக்கள் இன்று ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டமானது, கடந்த 3 ஆண்டுகளாக அரசு வழங்கிய லேப்டப்களுக்கு இணைய கட்டணம் அரசு கொடுக்கவில்லை என்பதற்காக நடத்துகிறார்கள். source : […]