Tag: VanniyarReservation

ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் வெளியிடப்பட்ட ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்ய கோரும் வழக்கு தொடர்பாக பதிலளிக்க உத்தரவு. வன்னியர் இட ஒதுக்கீட்டில் (TRP-PG Assistant) ஆசிரியர் தகுதி தேர்வில் வெளியிட்ட தேர்வு பட்டியலை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றம் மதுரை கிளை வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணையில், ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் நடவடிக்கைகளை தொடரலாம், ஆனால் இறுதி முடிவு நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்தனர். […]

#TET 3 Min Read
Default Image

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு – முதலமைச்சர் ஆலோசனை!

10.5% வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பான மேல் நடவடிக்கை குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை. வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, ஆர்எஸ் ராஜகண்ணப்பன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வில்சன், என்ஆர் இளங்கோ, தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் பங்கேற்றனர். 10.5% வன்னியர் இடஒதுக்கீடு அரசாணை ரத்து செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்பளித்துள்ள […]

#CMMKStalin 2 Min Read
Default Image

வன்னியர் இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதகம் ஏற்படாது – அன்புமணி ராமதாஸ்

இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே 10.5% இடஒதுக்கீட்டை கொண்டு வரலாம் என அன்புமணி ராமதாஸ் பேட்டி. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார்.இச்சந்திப்பில் பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர். அப்போது, வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு குறித்து புள்ளிவிவரங்கள் கொண்ட அறிக்கையை தயார் செய்து, நடப்பு கூட்டத்தொடரிலேயே புதிய சட்டம் இயற்ற வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாக கூறப்பட்டது. வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு ரத்து […]

#AnbumaniRamadoss 3 Min Read
Default Image

தீர்ப்பில் பல சாதகமான அம்சங்கள் உள்ளன! – பாமக நிறுவனர் ராமதாஸ்!

உள் ஒதுக்கீடு செல்லாது என்று அறிவித்திருந்தாலும் தீர்ப்பில் பல சாதகமான அம்சங்கள் உள்ளன என பாமக நிறுவனர் ராமதாஸ் பதிவு. தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு தந்தது செல்லாது என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாமக, தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், உள் ஒதுக்கீடு செல்லாது என்று அறிவித்திருந்தாலும் தீர்ப்பில் பல சாதகமான […]

#PMK 4 Min Read
Default Image

வன்னியர்கள் இடஒதுக்கீடு தொடர்பான பாமகவின் போராட்டம் தொடரும் – அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு அரசு உடனடியாக புள்ளி விவரங்களை எடுத்து மீண்டும் சட்டம் இயற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல். தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாமக, தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணையின்போது, வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு தந்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. வன்னியர்களை மட்டும் தனி பிரிவாக கருதுவதற்கு அடிப்படை முகாந்திரம் இல்லை என்றும்  ஒதுக்கீடு […]

#PMK 4 Min Read
Default Image

#BREAKING: வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு ரத்து செல்லும் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு செல்லாது என உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு தந்தது செல்லாது என டெல்லி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை உறுதி செய்து, தமிழக அரசின் வன்னியர் உள் இடஒதுக்கீடு வழக்கின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்துள்ளது. அதன்படி, 10.5% உள் ஒதுக்கீடு செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் […]

#PMK 4 Min Read
Default Image

#BREAKING: வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு – இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

வன்னியர்களுக்கான 10.5 % உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது, இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு. தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்காக 1983ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பின்படி, 10.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில், இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டது அரசியல் மற்றும் தேர்தல் நோக்கத்துடன் அறிவிக்கப்பட்டது என்றும் இதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஓபிசி பிரிவில் இருக்கக்கூடியவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் […]

#TNGovt 4 Min Read
Default Image

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமனங்களை மேற்கொள்ள ஏன் தடை விதிக்க கூடாது?

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு அடிப்படையில் நியமனங்களை மேற்கொள்ள ஏன் தடை விதிக்க கூடாது? என மனுதாரர் கோரிக்கை வைத்தனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் அரசியல் லாபத்துக்காக இயற்றப்பட்டதாக 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டது.  சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் தான் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக  தமிழக அரசு சார்பில் […]

#ChennaiHC 4 Min Read
Default Image

வன்னியர் இடஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகள் நாளை விசாரிக்கப்பட வாய்ப்பு..?

வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரிக்க வேறு அமர்வை சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது. தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கை நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், எஸ்.கண்ணம்மாள் அமர்வு விசாரிக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. தலைமை நீதிபதி சஞ்சீப் […]

#ChennaiHC 2 Min Read
Default Image

நீண்ட நாள் கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளது – வேல்முருகன்

வன்னியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசுப் பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும் பயன்பெறும் வகையில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கி முதலமைச்சர் முக ஸ்டாலின் அரசாணை வெளியிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, வன்னியர்கள் 10.5%, சீர்மரபினர் 7%, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5% என சிறப்பு ஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், […]

#TNGovt 4 Min Read
Default Image

அவருக்கு அவருடைய கவலை… முதல்வர் என்ன சொல்ல போகிறார்? – ப.சிதம்பரம் கேள்வி

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு குறித்து காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக அரசு கடந்த சட்டமன்றத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஓதுக்கீடு வழங்கியதை அடுத்து, ஒருபக்கம் சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்திய பிறகே உள் ஒதுக்கீடு செய்யவேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தாலும், மறுபக்கம் இது தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. அதாவது, சமீபத்தில் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு அளித்திருப்பது இறுதியானது […]

#AIADMK 5 Min Read
Default Image

வன்னியருக்கான 10.5% உள்ஒதுக்கீடு சட்டம் நிரந்தரமானது – ஓபிஎஸ்-க்கு பதிலடி கொடுத்த ராமதாஸ்

வன்னியருக்கான 10.5% உள்ஒதுக்கீடு தற்காலிகமானதென ஓபிஎஸ் பேசிய நிலையில் ராமதாஸ் பதிலடி கொடுத்துள்ளார். இன்று பிரபல நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளித்திருப்பது இடைக்கால ஏற்பாடு, இறுதியானது அல்ல, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு நிரந்தரமான உள் ஒதுக்கீடு அளிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், வன்னியருக்கான 10.5% உள்ஒதுக்கீடு சட்டம் நிரந்தரமானது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பதிலடி கொடுத்துள்ளார். சமூகநீதி குறித்து […]

#AIADMK 4 Min Read
Default Image

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு இறுதியானதல்ல! – துணை முதல்வர்

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளித்திருப்பது இடைக்கால ஏற்பாடு என்று துணை முதல்வர் ஓ.பன்னீசெல்வம் தெரிவித்துள்ளார். வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு வேண்டும் என்பது பாமகவின் நெடுநாள் கோரிக்கையாக இருந்த நிலையில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு மசோதா கடந்த தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு, இதற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்திருந்தார். இந்த வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு இறுதியானது அல்ல, தற்காலிகமானது என்றும் 6 மாதத்திற்கு பின்னர் சாதிவாரியான புள்ளிவிவரங்கள் கணக்கெடுப்பு அடிப்படையில் […]

#OPanneerselvam 4 Min Read
Default Image

வன்னியர் உள்ஒதுக்கீடு 10.5 % எதிர்த்து மேலும் 2 வழக்கு..!

வன்னியர் உள்ஒதுக்கீடு 10.5 % எதிர்த்து மதுரை கிளையில் மேலும் 2 வழக்கு தொடரப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கி அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில்,  வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேலும் 2 வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த அருண் பிரசாத், தூத்துக்குடியை சேர்ந்த பிராசில் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட […]

#MaduraiHighCourt 2 Min Read
Default Image

#breaking: வன்னியர் இட ஒதுக்கீடு – வழக்குகளை சென்னைக்கு மாற்றிய மதுரை கிளை

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரிய 2 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம். வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரிய 2 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீட்டை எதிர்த்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மேலும் 2 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விசாரித்த நீதிமன்றம் […]

highcourt 2 Min Read
Default Image

#BREAKING: வன்னியர் உள்ஒதுக்கீட்டிற்கு தடை கோரும் வழக்கு; இன்று விசாரணை..!

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 % உள் ஒதுக்கீட்டை எதிர்த்து தொடர்ந்த வழக்கு இன்று விசாணைக்கு வரவுள்ளது. வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 % உள் ஒதுக்கீட்டை எதிர்த்து தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சார்ந்தவரும், சமூகநீதி பேரவையின் மாநில பொறுப்பாளருமான சின்னான்டி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்தபொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், குடும்பகவுண்டர் சமூகத்தை சார்ந்த 30 லட்சம் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள இந்த சமூகம் கல்வி, சமூக பொருளாதர […]

#MaduraiHighCourt 4 Min Read
Default Image

#BREAKING : வன்னியர் இடஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்கு..!

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கி அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில்,  வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு இயற்றப்பட்ட தற்காலிக சட்டத்தை எதிர்த்து தென் நாடு மக்கள் கட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்காமல் எப்படி இந்த சட்டம் இயற்றப்பட்டது. மிகவும் பிறப்படுத்தப்பட்ட பிரிவில் 20% இட ஒதுக்கீட்டில் 68 சாதிகளை கொண்ட சீர் […]

chennai high court 3 Min Read
Default Image