சென்னை : தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை தலைவா் த.வெள்ளையன் (76). நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்னைகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறாா். இந்நிலையில், கடந்த செப்.3-ஆம் தேதி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக, சென்னை அமைந்தக்கரையில், உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். சாதாரண வாா்டில் அனுமதிக்கப்பட்ட அவா், அதன்பிறகு உடல் நிலை மிகவும் மோசமான காரணத்தால் கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டாா். பிறகு மருத்துவமனை தரப்பில் […]