தமிழக அரசு ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை பகுதி சுற்றுதலங்களுக்கு இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வால்பாறைக்கு செல்ல எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இதனையடுத்து, கடந்த சில நாட்களாக நூற்றுக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிற நிலையில், அங்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்திநாதன் உத்தரவின் பேரில், அட்டகட்டியில் மீண்டும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, இ-பயாஸ் […]