வலிமை திரைப்படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்று வாங்கியுள்ளதாம். படத்தின் நீளம் 2 மணி நேரம் 50 நிமிடம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அஜித்குமார் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. இந்த திரைப்படம் அஜித்திற்கு மிகவும் பிடித்தமான பைக் ரேஸிங் கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு விண்ணை முட்டும் அளவிற்கு இருக்கிறது. இந்த படத்தை வினோத் எழுதி இயக்கியுள்ளார். போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். […]