சென்னை : தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உறந்தைராயன் குடிக்காடு பகுதியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினார் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இச்சோதனை சென்னையிலும் தொடர்ந்து வருகிறது. கடந்த 2011 அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்சஒழிப்புத்துறை, ஊழல் தடுப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வைத்தியலிங்கத்தின் மூத்த மகன் V.பிரபு மீதும் […]
Election2024 : புதுச்சேரியில் வெற்றி பெறுவோம் என பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்துக்கே நம்பிக்கை இல்லை என காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியியலிங்கம் கூறியுள்ளார். புதுச்சேரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே 2019இல் வெற்றி பெற்ற வெ.வைத்தியலிங்கம் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் புதுச்சேரி மாநில அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார். புதுச்சேரி மண்ணாடிபட்டு சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும், புதுச்சேரி அமைச்சராகவும் உள்ள நமச்சிவாயம் தனது அமைச்சர், எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்யாமல் மக்களவைக்கு போட்டியிடுகிறார். இது குறித்து காங்கிரஸ் வேட்பாளரும், […]
சசிகலாவுடனான சந்திப்பு யதார்த்தமானது என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேட்டி. தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், தன்னை காப்பாற்றிக்கொள்ள யாருடனோ ரகசிய உடன்பாடு வைத்துக்கொண்டு அதிமுகவை அழிக்க பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி என தெரிவித்துள்ளார். ஈபிஎஸ் எப்படி முதலமைச்சரானார், எப்படி கட்சியை அபகரிக்க துடிக்கிறார் என்பது கடைக்கோடி தொண்டனுக்கும் தெரியும். ஈபிஎஸ் ஆணவப்போக்கிற்கு தொண்டர்கள் தக்க பதிலடி தருவார்கள் என்றும் கூறினார். ஈபிஎஸ் தன்னை பாதுகாத்துக் கொள்ள கட்சியை அழிக்க நினைக்கிறார் […]
சசிகலாவுடன் ஓ.பி.எஸ் ஆதரவாளர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் சந்திப்பு. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே காவரப்பட்டுவில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கத்தை சந்தித்து சசிகலா பேசியுள்ளார். திருமண விழாவில் நடந்த சந்திப்பில் ஒரத்தநாடு எம்எல்ஏவான வைத்திலிங்கத்துக்கு சாக்லேட்டையும் வழங்கினார் சசிகலா. அதிமுகவில் உட்சட்சி பிரச்சனை நிலவி வரும் நிலையில், சசிகலா ஒற்றுமை குரல் எழுப்பி வரக்கூடிய சூழலில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. தொண்டர்களை சந்திப்பதற்கும், கோயில் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வில் பங்கேற்பதற்கும் சசிகலா தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதற்காக கடந்த […]
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் வைத்திலிங்கத்தை நியமித்து ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு. அதிமுகவின் இணை, துணை ஒருங்கிணைப்பாளர்களை நியமனம் செய்து ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருக்கும் ஆர். வைத்திலிங்கம், இன்று முதல் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் வைத்திலிங்கத்தை நியமித்து ஓபிஎஸ் அறிவித்துள்ளார். மேலும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்களாக 3 பேரை நியமித்து ஓபிஎஸ் அறிவித்துள்ளார். அதன்படி, கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரை துணை […]
அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானரகத்தில் நடைபெறவுள்ளது.இதனை முன்னிட்டு,பொதுக்குழு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.அந்த வகையில்,பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே,தமிழகத்தில் மேலும் கொரோனா அதிகரித்தால் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஆன்லைனில் நடத்துவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.பொதுக்குழுவை ஆன்லைனில் நடத்துவது குறித்து ஒரு மாற்று திட்டத்தை அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் பரிசீலித்துள்ளதாகவும்,இது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் […]
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில்,அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில்,அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில்,வருகின்ற ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறாது என ஓபிஎஸ் ஆதரவாளரும்,முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.மேலும்,முன்னதாக நடைபெற்ற பொதுக்குழுவுக்கு உறுப்பினர்கள் ஆல்லாத 600 பேர் வந்திருந்ததால்தான் பிரச்சனை ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,தஞ்சையில் செய்தியாளர்களிடம் […]
நாங்கள் இணைந்து செயல்படத்தான் விரும்புகிறோம் எனவு ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கருத்து. தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம், அதிமுகவுக்கு கூட்டு தலைமை வேண்டும், கட்சியில் ஒன்றாக இருக்க வேண்டும், ஒற்றுமையுடன் இருந்து மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் நாங்கள் இணைந்து செயல்படத்தான் விரும்புகிறோம் எனவும் தெரிவித்தார். அதிமுக பொதுக்குழுவில் சட்டத்துக்கு முரணாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்தோம். 23 தீர்மானங்களை தான் பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]
அதிமுக பொதுக்குழு நேற்று சலசலப்புடன் நடைபெற்ற நிலையில்,இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியது.ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால்,டெல்லி புறப்படுவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்,பாஜக சார்பாக குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரௌபதி முர்மு இன்று வேட்புமனுவை தாக்கல் செய்வதை முன்னிட்டு அந்த நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்ததால்,டெல்லி செல்கிறேன் என தெரிவித்திருந்தார்.இதனிடையே,பொதுக்குழு கூட்டத்தில் உயர்நீதிமன்றம் […]
பொதுக்குழுவில் இன்று கத்தியவர்கள் உறுப்பினர்களே இல்லை, கூலிக்கு அழைத்துவரப்பட்டவர்கள் என வைத்திலிங்கம் பேட்டி. சென்னை வானகரத்தில் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் பரபரப்பாக நடைபெற்று நிறைவு பெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, அவர்களது ஆதரவாளர்களுடன் எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தனர். அப்போது, ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக சிவி சண்முகம் ஆவேசமாக தெரிவித்தார். அடுத்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையுடன், அனைத்து தீர்மானங்களும் […]
ஒன்றை தலைமை பிரச்சனை முடியாத நிலையில், அதிமுக பொதுக்குழுவை ஒத்திவைக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை. அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை வெடித்துள்ள நிலையில், பொதுக்குழுவை தள்ளிவைக்க கோரி வலியுறுத்தி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கடிதம் எழுதியுள்ளார். ஓபிஎஸ் எழுதிய கடிதத்தை செய்தியாளர் சந்திப்பில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் வாசித்தார். அதில், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முன்னறிவிப்பு இல்லாமல் ஒற்றை தலைமை குறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. ஒற்றை தலைமை குறித்து தன்னிச்சையாக […]
ஓபிஎஸ் அனுமதியின்றி ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் கொண்டு வந்தால் அது செல்லாது என வைத்திலிங்கம் பேட்டி. அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஆதரவாளர்களுடன் 4-ஆவது நாளாக இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். சென்னையில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ் நடத்திய ஆலோசனையில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், மைத்ரேயன் உள்ளிட்டோர் பபங்கேற்றனர். இந்த நிலையில், ஓபிஎஸ்-வுடனான ஆலோசனை கூட்டம் முடிந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய துணை […]
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதால் கே.பி.முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார் அதிமுகவின் கேபி முனுசாமி. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வேப்பனஹள்ளி தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில், எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுபோன்று, ஒரத்தநாட்டில் வைத்திலிங்கம் எம்எல்ஏவாக தேர்வான நிலையில், அவரும் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தலைமைச்செயலகத்தில் காணொலி காட்சி மூலமாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்ளவில்லை. இதைத்தொடர்ந்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உடனான ஆலோசனைக்குப் பின் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேட்டியளித்துள்ளார். அதில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இருவருக்கும் எனது ஆதரவு உண்டு. கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை. ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே எந்த […]