உலகப்புகழ் பெற்ற கள்ளழகர் மதுரை வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.அப்போது,ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பக்தர்கள் உயிரிழந்தனர்.இதனையடுத்து,கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் ஒருவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த செல்வம் என்பதும்,மற்றொருவரான 60 வயது மூதாட்டி யார் என்பதை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும்,கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் காயமடைந்துள்ள நிலையில் அவர்களும் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் நேரில் சந்தித்து […]
மதுரை வைகை ஆற்றில் உள்ள மையமண்டபம் 50 ஆண்டுகளுக்குப்பிறகு மறுசீரமைக்கப்படுகிறது. மதுரை வைகை ஆற்றின் நடுவே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டமைய மண்டபம் உள்ளது. மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான இந்த மண்டபத்தில் 36 தூண்கள் இருந்த நிலையில் தற்போது 24 தூண்கள் மட்டுமே உள்ளன. மிகவும் சிதிலமடைந்து காணப்படும் இந்த மண்டபத்தை மறுசீரமைக்க 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகமும், தமிழக அரசும் முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, சுமார் 43 லட்ச ரூபாய் […]
திருமங்கலம்: விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் செவ்வாயில் தாலுகா அளவில் நடைபெறுகிறது. அதன்படி திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர் முகாமிற்கு மண்டல துணை வட்டாட்சியர் அழகர்சாமி தலைமை வகித்தார். வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள், ‘‘சிப்காட் அமைவதாக கூறிய சிவரக்கோட்டை பகுதியில் அதிகாரிகள் சிலர் இடம் வாங்கியுள்ளனர். இதனால் விவசாயிகள் தொடர்ந்து எதிர்த்து வரும் சிப்காட் திட்டத்தினை கொண்டு வருவார்களோ […]