சென்னை: வைகை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் 4 மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையிலிருந்து இன்று முதல் நான்கு நாட்களுக்கு 19ம் தேதி வரை, சிவகங்கை மாவட்ட பாசன தேவைக்காக மொத்தம் 376 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அதன்படி, விநாடிக்கு 1,500 கன அடி நீர் திறக்கப்படுவதால், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 4 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதன் காரணமாக தமிழக நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக நீர்நிலை கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். தென் தமிழகத்தில் வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாகவும், கேரளா, முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் தொடர்ந்து வைகை அணைக்கு திறந்து விடுவதன் காரணமாகவும் வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழை… வானிலை […]
தமிழகத்தில் கடந்த வாரம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், ஏற்கனவே, கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் விடாமல் மழை பெய்து வருவதால், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் தொடர்ந்த மலை பெய்து வருவதாலும், பெரியாறு அணையில் இருந்தும் […]
வைகை அணையிலிருந்து ஜூன் 1-ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதி விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசனப் பகுதியில் முதல் போக பாசனப் பரப்பான திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் 1797 ஏக்கர், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் 16452 ஏக்கர் மற்றும் மதுரை வடக்கு வட்டத்தில் 26792 […]
வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்தின் விவசாயிகள் பயன்பெற வேண்டி தண்ணீர் திறக்க வேண்டுமென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தின் விவசாய பகுதிக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க விட வேண்டுமென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற நிலையில் வைகை பூர்வீக பாசன இரண்டாம் பகுதியில் உள்ள கண்மாய்க்கு பகுதி 1ல் இருந்து 4 கண்மாய்க்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது என்றும் வருகின்ற 29 ம் தேதியில் இருந்து 6 நாட்களுக்கு 184 கன அடி வரையிலான நீர்திறக்க உத்தரவிட்டபட்டிருந்ததாக அந்த அறிக்கையில் முதல்வர் […]